காவல் ஆணையர் வேண்டுகோள்: குழந்தைகளை ஆக்சன் சினிமா , செல்போனில் ஆக்சன் கேம் வீடியோ விளையாட அனுமதிக்காதீர்கள்..!

குழந்தைகளை ஆக்சன் சினிமா , செல்போனில் ஆக்சன் கேம் வீடியோ விளையாட அனுமதிக்காதீர்கள் என காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் ஹுப்பள்ளி மொருசவீரா மடத்திற்கு அருகிலுள்ள காமரிபேட்டை குருசித்தேஷ்வர் நகரில் வசித்து வந்த மாணவன் சேத்தன் ரக்காசகி. இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பு செல்ல இருந்தான். சம்பவத்தன்று மாலையில் வீட்டின் தேனீர் அருந்திவிட்டு தனது தாயிடம் புதிய ஆடைகளை எடுத்து வைக்க சொல்லி விட்டு தெருவில் விளையாட சென்றான்.

இம்மாணவனும், எதிர்வீட்டில் வசிக்கின்ற 6-ம் வகுப்பு மாணவனும் நண்பர்கள் ஆவார்கள். 2 பேரும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செல்போனில் ஆன்லைன் வன்முறை வீடியோ விளையாட்டில் வருவதுபோது கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதில் ஆத்தரம் அடைந்த 6-ம் வகுப்பு மாணவன் வீட்டிற்கு ஓடிச் சென்று ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு வந்து 9-ம் வகுப்பு மாணவன் சேத்தன் ரக்காசகியின் வயிற்றில் குத்தி விட்டு வீட்டுக்கு சென்று பதுங்கி கொண்டான்.

படுகாயமடைந்த சேத்தன், கே.எம்.சி-ஆர்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து காமரிபேட்டை காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று 6-ம் வகுப்பு மாணவனை காவல் நிலையத்துக்கு காவல் வாகனத்தில் அழைத்து செல்ல முற்படும்போது அவர்களுடன் செல்ல மறுத்து சிறுவன் அடம் பிடித்தான். அம்மா காவல்துறை கூப்பிட்டு போறாங்க, நான் போக மாட்டேன் என குழந்தை போல் அடம்பிடித்தான்.

தான் செய்த விபரீத காரியத்தால் தன்னுடன் விளையாடிய நண்பனின் உயிர் போய் விட்டது என்று கூட அந்த சிறுவனுக்கு தெரியவில்லை. அந்த சிறுவனை சமாதானப்படுத்தி வாகனத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கே.எம்.சி.ஆர்.ஐ மருத்துவமனையில் காவல் ஆணையர் சசிகுமார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் சசிகுமார் பேசுகையில், 2 சிறுவர்களும் எதிர் எதிர் வீடுகளை சேர்ந்தவர்கள். ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சாதாரண விசயத்திற்காக கொலையில் முடிந்துள்ளது. சட்ட நடைமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் இதுகுறித்து கவனமாக இருக்க வேண்டும். கொலையுண்ட சிறுவன் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தான். ஒரே மகன். பெற்றோர் ரொட்டி விற்று பிழைப்பு நடத்துகிறார்கள்.

இது ஒரு மனதை உடைக்கும் சம்பவம். கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பம் ஏழ்மையானது. பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளைஆக்சன் சினிமா , செல்போனில் ஆக்சன் கேம் வீடியோ விளையாட அனுமதிக்காதீர்கள். அது சிறுவர்களின் மனநிலையை மனநிலையை வன்முறைமிக்கவர்களாக மாற்றிவிடும் என காவல் ஆணையர் சசிகுமார் தெரிவித்தார்.

நிர்வாகம் அதிரடி தகவல்: டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ரிஷாப் பண்ட் தொடருவார்

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தொடங்கி நடந்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டது. மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நாளை மறுதினம் தொடங்கி அக்டோபர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் இந்தியாவில் ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே தோள்பட்டை காயத்தில் சிக்கியதால் ஐ.பி.எல்.-ல் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக அதன் பிறகு காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட அவர் ஓய்வில் இருந்தார்.

அவருக்கு பதிலாக ஒருபுறம் சேவாக் மறுபுறம் கங்குலி இருவரின் அதிரடியை நினையூட்டும் வகையில் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர் இளம் விக்கெட் வீரர் ரிஷாப் பண்ட் கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அதன் விளைவு முதல் 8 ஆட்டங்களில் அந்த அணி 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் சென்றுள்ளது.

இதற்கிடையே, ஐ.பி.எல். தள்ளிவைக்கப்பட்டதால் கிடைத்த 4 மாத காலஅவகாசத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும் காயத்தில் இருந்து குணமடைந்து அணியுடன் இணைந்து விட்டார். அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் டெல்லி அணியின் கேப்டன் யார்? என்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில் ஐ.பி.எல். 2-ம் கட்ட சீசனிலும் ரிஷாப் பண்டே கேப்டனாக தொடருவார் என்று டெல்லி அணி நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்து வெளியிடப்படுள்ளது.