மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாட்டம்

1970-களில் மதுரையிலிருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்து சினிமா துறையில் அடிமட்டத்தில் இருந்து போராடி வாய்ப்புகளைப் பெற்று, படிப்படியாக ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து உச்ச நடிகராக விஜயகாந்த் விளங்கியவர். கடந்த ஆண்டு டிசம்பர் 28 -ஆம் தேதி 71 வயதில் விஜயகாந்த் மறைந்தார். தனது கொடைத் தன்மையால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த விஜயகாந்த்தின் 72-வது பிறந்தநாள் இன்று. விஜயகாந்த் பிறந்த இன்றைய நாள் தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம், தேமுதிக வடலூர் நகர செயலாளர் சாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தேமுதிக மாவட்ட மாணவரணி செயலாளர் எழிலரசன் கலந்துகொண்டு சிறப்பித்தார். பின்னர் வடலூர் நகராட்சி அலுவலகம் எதிரே ஆபத்தானபுரம் மற்றும் வெங்கடகுப்பம் ஆகிய வடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேமுதிக கழக கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து வெங்கடக்குப்பம் அரசு பள்ளியில் பயிலும் சுமார் 100 பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் ,பேனா வழங்கப்பட்டது. மேலும் வடலூர் பேருந்து நிலையத்தின் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக தேமுதிகவினர் கொண்டாடினர்.

நிகழ்வில் வடலூர் நகரத் துணைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், ஏழுமலை, கந்தன் மாவட்ட பிரதிநிதி குமரவேல், வேல்முருகன் தேமுதிக நிர்வாகிகள் சுதாகர், ரவி, சுப்பு உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குள்ளஞ்சாவடி பேருந்து நிலையத்தில் விஜயகாந்தின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு சிக்கன் பிரியாணி

1970-களில் மதுரையிலிருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்து சினிமா துறையில் அடிமட்டத்தில் இருந்து போராடி வாய்ப்புகளைப் பெற்று, படிப்படியாக ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து உச்ச நடிகராக விஜயகாந்த் விளங்கியவர். கடந்த ஆண்டு டிசம்பர் 28 -ஆம் தேதி 71 வயதில் விஜயகாந்த் மறைந்தார். தனது கொடைத் தன்மையால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த விஜயகாந்த்தின் 72-வது பிறந்தநாள் இன்று. விஜயகாந்த் பிறந்த இன்றைய நாள் தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கடலூர் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான ப.சிவக்கொழுந்து மற்றும் தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் S.ராஜாராம் அவர்களின் அறிவுறுத்தலின்படி குள்ளஞ்சாவடி பேருந்து நிலையத்தில் சுமார் 300-க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தேமுதிக குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கே பி ஆர் சரவணன் தலைமையில் மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

முன்னதாக தேமுதிக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள பொது மக்களுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர் தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் K. சுமோசுரேஷ் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.S. செல்வராஜ், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொருளாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட பிரதிநிதி ராஜராஜன் சமட்டிக்குப்பம் ஊராட்சி செயலாளர் S.M. சேகர், கிளை கழக செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய துணை செயலாளர் ஜோதி மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் வெங்கடேசன் ஒன்றிய தொண்டரணி செயலாளர் சத்யராஜ் கிளை கழக செயலாளர் பழனிவேல்.பாலமுருகன். கோதண்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.