12 வயது மகளின் கதறலை கண்டுகொள்ளாத தாய்! தாயின் 3-வது கணவர் செய்த கொடூரம்..!

வீட்டில் தனியே இருந்த வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தாயின் 3-வது கணவர்.. 12 வயது மகளின் கதறலை கண்டுகொள்ளாத தாய்! ஒட்டுமொத்த நீலகிரி மாவட்ட மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வசித்து வரும் 40 வயது பெண் ஒருவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து 2-வது திருமணம் செய்தார்.2-வது கணவருடன் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரையும் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரை அந்த பெண் மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பெண் குழந்தைகள் தாய் மற்றும் வளர்ப்பு தந்தை என நான்கு பேரும் ஒன்று ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. கணவன் – மனைவி இருவருமே அந்த பகுதியில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

இதனிடையே, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி, வளர்ப்பு தந்தை வேலையை முடித்துவிட்டு சீக்கிரமாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் 12 வயது சிறுமி தனியாக இருந்த நிலையில், அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அத்துடன் இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார்.

பிறகு வீட்டிற்குள் தன்னுடைய அம்மா வந்ததுமே, சிறுமி நடந்த விஷயத்தை கண்ணீருடன் கூறியுள்ளார். இதைக்கேட்ட தாய், சிறுமியிடம் இதனை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்று மூன்றாவது கணவனின் செயலுக்கு துணைபோயுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமி, தன்னுடைய பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் முறையிட்டிருக்கிறார்.

அந்த ஆசிரியைதான், சிறுமியை வைத்து, உடனடியாக 1098 என்ற எண்ணில் குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.. சிறுமியிடமிருந்து புகார் வந்ததை அறிந்த, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், உடனடியாக சம்பந்தப்பட்ட சிறுமியிடம் நேரடியாகவே இதுகுறித்து விசாரித்துள்ளனர். இதற்கு பிறகு குன்னூர் மகளிர் துறையினர், சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை மீது போக்சாவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், 3-வது கணவனுடன் சேர்ந்து, அந்த தாயும் இப்போது தலைமறைவாகி இயிருக்கிறார். எனவே, அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அமைச்சர் கீதாஜீவன்: போக்சோ சட்டம் குறித்து தீவிர விழிப்புணர்வு..! 1098-க்கு தொடர்ந்து புகார்கள்..!

“போக்சோ சட்டம் குறித்து தீவிர விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. 1098-க்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன” என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.ஜவுளித்துறை சார்ந்த பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனியார் அமைப்புடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அவிநாசி அருகே திருமுருகன் பூண்டியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். இத்தனை தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார். அப்போது, “போக்சோ சட்டம் குறித்து தீவிர விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.

1098-க்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. காவல்துறை, கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை நேய தமிழகமாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு, கடந்த 3 ஆண்டுகளில், ரூ. 84 கோடியே 91 லட்சம் நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது,” என கீதாஜீவன் தெரிவித்தார். இந்நிகழ்வில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சமூகநலன் மகளிர் உரிமைத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன்,கைத்தறி மற்றும் கைத்திறன் துணி நூல் துறை செயலர் அமுதவல்லி, சமூகநலத்துறை ஆணையர் லில்லி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.