ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்த ஹோமியோபதி மருத்துவர் இரண்டாவது முறையாக கைது…!

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி கிராமத்தில் ஒருவர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட இணை மருத்துவர் நிவேதிதாவுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மருத்துவ குழுவினர் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி கிராமத்திற்கு சென்று அங்குள்ள மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தவர் வீட்டை சோதனை செய்தனர். அப்போது ஜெயபாலன் ஹோமியோபதி படித்துவிட்டு தனது வீட்டிலேயே ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வருவதும் தெரியவந்தது.

ஜெயபாலன் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக போலி மருத்துவம் பார்த்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டில் உள்ள மருந்துகள் அனைத்தும் பறிமுதல் செய்து போலி மருத்துவர் ஜெயபாலனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஏற்கனவே 2018-ம் ஆண்டில் புகாரின் அடிப்படையில் ஜெயபாலன் போலி மருத்துவர் என்று கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.