ஃபஸ்ட் நைட்டில் கணவனுடன் தாம்பத்ய உறவுக்கு பதிலாக காதலனுடன் வீடியோ காலில் பேசிய பெண் ..!

காதலனுக்கு கசாயத்தில் விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த செய்தி பரபரப்பாக சமயத்தில் திருமணமான 25 -ஆவது நாளில் கணவருக்கு மனைவியே கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள கருவேப்பிலம்பாடியை சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் கலையரசனுக்கு கடந்த ஜனவரி மாதம் 26 -ஆம் தேதி ஷாலினி என்ற பெண்ணுடன் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து கலையரசனுடன் முதலிரவுக்கு சென்ற போது காதலனுடன் வீடியோ கால் போட்டு ஷாலினி பேசியதாக தெரிகிறது. இதனால் கலையரசன் அதிர்ச்சி அடைந்து ஷாலினிக்கு புத்திமதி சொல்லி அனுப்புமாறு அவருடைய தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். பிறகு அந்த பெண்ணின் உறவினர்கள், எல்லாம் போக போக சரியாகிவிடும் என கூறி ஷாலினியை மீண்டும் கணவன் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் காதலனின் நினைவாகவே இருந்த ஷாலினி, கடந்த 20- ஆம் தேதி கலையரசனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக தெரிகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட கலையரசன் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஷாலினி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலையரசனின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த கலையரசனின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

அந்த வாக்குமூலத்தில், ஜனவரி 26-ஆம் தேதி எனக்கு திருமணம் நடந்தது. ஜனவரி 25 -ஆம் தேதி அந்த மணப்பெண் விஷம் குடித்துவிட்டார். அதிர்ச்சி அடைந்த நாங்கள் என்னவென கேட்ட போது, “அப்பாவுக்கும் பொண்ணுக்கும் சண்டை” என மழுப்பினர். இதையடுத்து எனக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. முதலிரவின் போது ஒரு பையனிடம் வீடியோ காலில் ஷாலினி பேசிக் கொண்டிருந்தார். உடனே நான், அது யார் என கேட்டேன். அது யாருமில்லை என மழுப்பிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

அதற்கு அடுத்த நாளும் இரவு 2 மணி வரை யாரோ ஒரு பையனிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், அவருடைய சித்தப்பா, மாமா உள்ளிட்டோரிடம் போய் சொன்னேன். பிறகு நான் வீட்டிற்கு வந்ததும் அந்த பெண்ணிடம் நான் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. உடனே அந்த பெண்ணின் சித்தப்பாவும் மாமாவும், அந்த பெண்ணை அழைத்து புத்திமதி சொல்லி, இனி அந்த பையனுடன் பேசாதே என தெரிவித்தனர். அன்று முதல் என்னிடம் அந்த பெண் பேசவே இல்லை. எங்களுக்குள் தாம்பத்ய உறவும் நடக்கவில்லை. அந்த பெண், அந்த பையனுடன் போன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த நான் கோபமடைந்து ஏன் இது போல் செய்கிறாய் என கேட்டேன். அதற்கு அந்த பெண், நான் யாருடன் வேண்டுமானாலும் போன் பேசுவேன். இதை நீ கேட்கக் கூடாது என கூறினார்.

இதையடுத்து பெண்ணின் உறவினர்களை வைத்து இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து நடந்தது. இதனிடையே எனக்கு பெண் மீது சந்தேகமாக இருப்பதால் அவருடைய தாய் வீட்டிற்கு கொண்டு போய் விட்டுவிட்டு வந்துவிட்டேன். இதனால் பஞ்சாயத்தில் “பெண்ணை ஏன் தாய் வீட்டில் விட்டு வந்தாய், தாலி கட்டியதால் நீ தான் அந்த பெண்ணை வைத்து வாழ வேண்டும்” என்றார்கள். அதற்கு நான், “பெண்ணின் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை, என்னை ஏமாற்றுகிறார், அதனால் அவரை வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டேன்” என்றேன்.

இதையடுத்து அவர்கள் அதெல்லாம் முடியாது என கூறி பஞ்யாயத்து செய்து பெண்ணுடன் என்னை வாழ வைத்தார்கள். அப்போது என் தம்பியும் அப்பாவும் காவல் நிலையத்தில் இருந்து போன் போட்டார்கள். உடனே பஞ்சாயத்து செய்த அந்த பெண்ணின் உறவினர்கள் என் கழுத்தில் கத்தியை வைத்து என்னை மிரட்டினார்கள். காவல் நிலையத்திற்கு போனால் கொன்றுவிடுவோம் என்றார்கள். உடனே நானும், என் தம்பியிடம் ஒன்றும் பிரச்சினை இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறிவிட்டேன்.

இதையடுத்து பெண்ணை அவருடைய தாய் வீட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்தேன். என்னிடம் அந்த பெண் சரியாக பேசவில்லை. உடனே அந்த பெண்ணின் சித்தப்பா அவருக்கு போன் செய்து, “மாப்பிள்ளைக்கு எல்லாமே தெரிந்துவிட்டது, அவரை உயிருடன் விட்டால் உன்னை கொன்றுவிடுவான்” என கூறியிருந்தார். இந்நிலையில் நான் இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்கு போன போது, அசதியாக இருந்ததால் பால் கொடுக்குமாறு கேட்டேன்.

அதற்கு அந்த பெண், பால் இல்லை, கூல்டிரிங்ஸ் இருக்கிறது என கூறி கொடுத்தார். நான் அந்த குளிர்பானத்தை குடித்த போது கசப்பாக இருந்தது. அதை கேட்ட போது ஷாலினி சமாளித்துவிட்டார். இதையடுத்து ஷாலினி போய் தூங்கிவிட்டார். நானும் படுத்துவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்து , என்னை ஷாலினி எழுப்பி, “நான் கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து விட்டேன். என் மாமா, சித்தப்பா ஆகியோர் சொல்லித்தான் இப்படி செய்தேன். என்னை பற்றி எல்லா விஷயமும் உனக்கு தெரிந்து விட்டது. உன்னை கொன்றால்தான் நான் என் காதலனுடன் சந்தோஷமாக வாழ முடியும். அதனால் கூல்டிரிங்ஸில் மருந்து வைத்துவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ செத்து போயிடுவ” என அந்த பெண் சொன்னதும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

உடனே அந்த பெண்ணின் உறவினர்களிடம் இதை சொன்னேன். அப்போது அவர்கள் என்னை குள்ளஞ்சாவடியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்கள். அங்கு நான் பிழைக்க மாட்டேன் என சொல்லிவிட்டதால், என்னை புதுவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறினார்கள். என்னை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு போய்விட்டார்கள். என்னை என் தம்பி, அவருடைய மனைவி, என் அப்பா, அம்மா, என் தங்கை, என் தங்கை கணவர் உள்ளிட்டோர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனது இந்த நிலைக்கு முழு காரணம் என் மனைவியும் அவரை சேர்ந்தவர்களும் தான் என கலையரசன் வாக்குமூலம் அளித்தார்.

காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த காதலி…! காதலின் உன்னதமான உணர்வை கொலை செய்துள்ளார்..!

டிஜிட்டல் யுகத்தில் அடியெடுத்து வைத்த காலம் தொட்டே அலைபேசி, டேப், ஐ-பாட் கையில் இருந்தால் உலகமே கையடக்கத்தில் வந்ததில் இருந்தே இன்றைய சமுதாயம் பல வழிகளில் இன்னல்களை ஏற்பட்டாலும் காவல்துறையினர் மற்றும் நீதி துறையினருக்கு அவ்வப்போது துணையாக இருக்கிறது. அதன் வரிசையில், காதலனுக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொன்ற வழக்கில், நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லாத போதும், சூழ்நிலை சான்றுகளை இணைத்து, டிஜிட்டல் ஆதாரங்களின் துணையுடன் குற்றத்தை நிரூபிக்க காதலிக்கு தூக்கு தண்டனை விதிக்க உதவி இருக்கின்றது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பாறசாலையை சேர்ந்த ஜெயராஜன் – பிரியா தம்பதியின் இளைய மகன் ஷாரோன் ராஜ் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு படித்து வந்தார். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா அழகியமண்டபம் பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் கல்லூரிக்குச் சென்றுவர ஒரே பேருந்தில் பயணம் செய்ததில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  ஜாதி, மத பேதமின்றி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை மறந்து கண்களில் தோன்றி, இதயத்தில் முடியும் அகநானூறு படைத்த சங்கத் தமிழ் சமுதாயத்தின் நாத வேர் காதலாக மாறியது.

இது வாழ்க்கைப் படகு படத்தில் வரும் நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ என்ற பாடல் வரிகளாய் மாறினர். மேலும் அலைபேசியில் இவர்கள் இருவரும் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமாக பேசி பேசி கடலை போட்டனர். ஒருகட்டத்தில் அலைபேசி இவர்கள் போட்ட கடலை பாலியல் உணர்வுகளை தூண்டியதால் இருவரும் கல்லூரியை “கட்” அடித்து விட்டும் பல இடங்களில் தனிமையில் இருந்துள்ளார். மேலும் கிரீஷ்மாவின் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் ஷாரோன் ராஜியுடன் தனிமையில் உல்லாசமான இருப்பதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளனர்.

இவர்களின் காதல் விவகாரம் கிரீஷ்மாவின் தாய் சிந்துவிற்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிந்து தனது மகள் கிரீஷ்மாவின் நடவடிக்கைகளை கவனிக்க தொடங்கியது மட்டுமின்றி தனது சகோதரர் நிர்மலகுமாரன் நாயர் மூலம் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தொடங்கினார். இந்நிலையில், கிரீஷ்மா தனது தாயிடம் ஷாரோன் ராஜ் என்பவரை காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

ஆனால் கிரீஷ்மாவின் தாய் சிந்து இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் இல்லாமல் 2022 -ஆம் ஆண்டு மார்ச் 4 -ஆம் தேதி கிரீஷ்மாவின் சம்மதம் இல்லாமல் பணக்கார இடத்தில் அதாவது ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் முடித்துள்ளார். தாயின் செயலை கண்டு அதிர்ந்து போன கிரீஷ்மா ஷாரோன் ராஜிக்கு போன் செய்து தனது வீட்டில் நம் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் நான் உன்னுடன் வந்து விடுகிறேன், இருவரும் எங்காவது சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதையடுத்து ஷாரோன் ராஜ், கிரீஷ்மா சொன்னது போல் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோயிலில் வைத்து தாலியையும் கட்டியுள்ளார்.

மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் மீண்டும் இவர்கள் திருமணம் செய்து  கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் ஒரு ஹோட்டலில் இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். இதை அறிந்த கிரீஷ்மாவின் தாய் சிந்து ஷாரோன் ராஜ், கிரீஷ்மாவை பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். மற்றொருபுறம் ஷாரோன் ராஜூடன் நடந்த திருமண வாழ்க்கையில் கிரீஷ்மாவிற்கு திருப்பி அடையாமல் இருந்ததால் நாம் தவறு செய்து விட்டோமோ என உணர்த்துள்ளார்.

இதனை அறிந்த கிரீஷ்மா தாய் சிந்து மகளின் ஜாதகத்தை ஜோஷியரிடம் காட்டியதாகவும் ஜாதகத்தின்படி அவருக்கு முதல் கணவர் உடனே இறந்துவிடுவார் என்றும் இரண்டாவது கணவர்தான் உயிருடன் இருப்பார் என்றும் அவருடன்தான் கிரீஷ்மா வாழ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஷாரோன் ராஜிடன் நடந்த திருமணத்தை கிரீஷ்மாவுக்கு திருப்தி இல்லாததால் உறவை முடித்து கொள்ள முடிவு செய்துள்ளார். மேலும் ஷாரோன் ராஜிடன் நெருக்கமாக இருந்த காலங்களில் எடுத்த அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்குவதற்கு முன்னர் இருந்ததை போலவே இருந்து நீக்குவதற்கு முயற்சி செய்தார்.

அந்த முயற்சியில் கிரீஷ்மாவின் காதல் பூவிலுள்ள பனித்துளி போல மெல்ல மெல்ல மறைய, ஷாரோன் ராஜின் காதல் வேரில் உள்ள நீரைப்போல ஆழமாக இருந்தது. ஆகையால், ஷாரோன் ராஜை கொலை செய்ய கிரீஷ்மா தீர்மானித்தார். இதனைதொடர்ந்து, 2022 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 -ஆம் தேதி அன்று போதைப்பொருள், விஷம், பாராசிட்டமால் மருந்து குறித்தும் பாராசிட்டமாலை எப்படி விஷமாக பயன்படுத்தலாம்? அதை எந்த ஜூஸில் கலந்து கொடுத்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்றெல்லாம் தனது அலைபேசி வழியாக இணையத்தில் கிரீஷ்மா தேடியுள்ளார்.

இதனை தொடர்ந்து பாராசிட்டமால் மருந்தை, ஜூஸில் கலந்து “ஜூஸ் சேலஞ்ச்” எனச் சொல்லி அந்த ஜூஸை குடிக்கச் செய்துள்ளார்.  ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தால் “ஜூஸ் சேலஞ்ச்” தடைப்பட்டு போக எமனின் பாச கயிற்றிலிருந்து ஷாரோன் ராஜின் உயிர் தப்பிக்கொண்டே சென்றுள்ளது.

ஆனாலும் கிரீஷ்மா தனது காதலனை கொலை செய்யும் முயற்சியை கைவிடவில்லை. காதலனை எப்படியாவது கொலை செய்து விட வேண்டும் என கொலை செய்வதில் தீவிரம் காட்டினாள். ஜூஸுடன் பாராசிட்டமால் கலக்குவது எப்படி என்று கிரீஷ்மா 23 முறை இணையத்தில் தேடியுள்ளார். திருநெல்வெளியை சேர்ந்த ராணுவ வீரருடனான திருமண தேதி நெருங்க, நெருங்க ஒருபுறம் பயம் மறுபுறம் திருமணத்திற்கும் காதலனுடன் நெருக்கமாக இருக்கும்  அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எப்படியாவது நீக்கியாக வேண்டும் மேலும் காதலனை கொன்று விடவேண்டும் என்று தீவிரம் காட்ட தொடங்கினார்.

வீட்டில் யாருமில்லை ஜாலியா இருக்கலாம் என கிரீஷ்மாவிடமிருந்து அழைப்பு வந்த அடுத்த நொடியே கிரீஷ்மாவின் மீது இருந்த மோகத்தில் வீட்டை ஷாரோன் ராஜ் அடைந்தான். கஷாயத்தில் பாராகுவாட் கலந்ததை ஷாரோன் ராஜிடம் என் மீது உனக்கு காதல் இருந்தால் நான் கொடுக்கும் கசப்பு கசாயத்தை குடி பார்ப்போம் என கூறியுள்ளார். காதலைப்போல் மிகச் சிறந்த பரிசும் இல்லை.. மிக மோசமான தண்டனையும் இல்லை என உணர்ந்த ஷாரோன் ராஜ், காதலி மீது கண்மூடித்தனமான இருந்த அன்பு காரணமாக கிரீஷ்மா கொடுத்த கசாயத்தை குடித்தான். இதன்பிறகு கசப்பு சுவை நீங்க வேறு ஒரு இனிப்பு ஜூஸையும் கிரீஷ்மா கொடுத்துள்ளார்.

இந்த ஜூஸை குடித்ததும் உடல் ஒரு மாதிரி இருக்கவே தனது நண்பனை வரவழைத்து அவருடன் பைக்கில் ஷாரோன் ராஜ் வீடு திரும்பினார். அப்போது திரும்பும் வழியெல்லாம் ஷெரான் ராஜ் வாந்தி எடுத்து வந்துள்ளான். அப்போது அந்த நண்பரிடம், கிரீஷ்மா எனக்கு கசாயம் கொடுத்து ஏமாற்றிவிட்டார் என ஷாரோன் ராஜ் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷாரோன் ராஜ் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் என்று ஒவ்வொன்றாக செயலிழக்க  பரிதாபமாக உயிரிழந்தான்.