மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசின் சார்பாக பல்வேறு மக்கள் நலத்திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அவ்வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார்.