வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நெய்வேலி கங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் புவனகிரி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேரணியில் புவனகிரி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், கங்கைகொண்டான் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ,பள்ளி மாணவர்கள் , வருவாய் துறை ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் பேரணியாக சென்றனர்.
கங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி மந்தார குப்பத்தில் உள்ள முக்கிய கடை வீதிகள் வழியாக சென்று பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியின் போது பொதுமக்களுக்கு மற்றும் வணிகர்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.