பட்டாசு வியாபாரியிடம் ரூ.1.88 கோடி மோசடி..!

சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த பீர் அனீஸ் ராஜா ஒரு பட்டாசு வியாபாரி. இவரிடம் தனியார் ‘ரேடியோ’ எப் எம்.ல் விளம்பர பிரிவில் ஊழியராக பணியாற்றிய விஜயராகவன் என்பவர், விளம்பர நிறுவனம் தொடங்க வைத்தாக கூறி ரூ.1.88 கோடி பணம் பெற்றுள்ளார். ஆனால் விஜயராகவன் கூறியதைப்போல விளம்பர நிறுவனம் தொடங்கவில்லை ஆகையால், இந்த பணத்தை பீர் அனீஸ் ராஜா திரும்ப கேட்ட போது, பிரபல நகை கடையின் பெயரில் போலி வவுச்சர் தயார் செய்து, நகைகள் வாங்கி கொள்ளலாம் என்றும் ஏமாற்றி உள்ளார். இந்த மோசடி குறித்து பீர் அனீஸ் ராஜா மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவில் புகார் அளித்தார்.

அதன் பேரில் ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனைதொடர்ந்து விஜயராகவன் தலைமறைவு ஆனார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த விஜயராகவன் பம்மல் வ.உ.சி. நகர் சூரியம்மன் கோவில் தெருவில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விஜயராகவனை பல்லாவரத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்து, சிறையில் அடைத்தது.