விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிப்பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை படையல்..!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது. திருச்சி மலைக்கோட்டையின் நடுவே தென் கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமான சுவாமி கோயிலும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் அமைந்துள்ளது.

இந்தக் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி செப்டம்பர் 20 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காலை 7 மணியளவில் மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமிக்கு கஜபூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜையும், சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

பின்னர் பிரம்மாண்ட கொழுக்கட்டையும் நைவேத்தியம் செய்யப்பட்டது. இந்த விழாவிற்காக கோயில் மடப்பள்ளியில் 6 கிலோ வரையிலான தேங்காய்ப்பூ, 60 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ அளவிலான உருண்டை வெல்லம், 4 கிலோ ஏலக்காய், ஜாதிக்காய், எள் மற்றும் 30 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி 24 மணி நேரத்திற்கு முன்பு சுடுநீர் ஆவியில் வேகவைத்து 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது.

பிறகு இ ந்த கொழுக்கட்டையை இன்று காலை கோயில் பணியாளர்கள் ஒரு துணியில் தொட்டில் போல கட்டி மடப்பள்ளியில் இருந்து தூக்கிக்கொண்டு சென்றனர். இதில் உச்சிப்பிள்ளையாருக்கும், பின்னர் மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ அளவிலான கொழுக்கட்டையை படையலிட்டனர்.

பிறகு மாணிக்க விநாயகருக்கு உச்சி பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் அதிகளவு கலந்து கொண்டனர்.

Happy Vinayaka chathurthi 2024: விநாயகர் சதுர்த்தி வரலாறு..!

ஆவணி மாதம் செப்டம்பர் 7-ஆம் தேதி சனிக்கிழமை வளர்பிறையில் வருகின்ற நான்காவது திதியான சதுர்த்தி திதி ‘விநாயகர் சதுர்த்தி‘ தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் வீடுகளில் மாவிலை தோரணங்களால் அலங்கரித்து விநாயகருக்கும் அலங்காரம் செய்து அவருக்கு அவல் பொரி, பழங்கள், மோதகம், கொழுக்கட்டை படையலிட்டு பலரது வீடுகளில் வணங்கப்படுகின்றது.

மராட்டிய மன்னர் சிவாஜி முகலாயர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது குடிமக்களிடையே தேசியவாத உணர்வை ஊக்குவிப்பதற்கு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். அதன்பின்னர், 1893 -ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் அரசியல் கூட்டங்களைத் தடைசெய்தபோது, ​​பாலகங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு புத்துயிர் கொடுத்தார். மகாராஷ்டிராவில் மிக பிரபலமாக கொண்டப்படும் விநாயகர் சதுர்த்தி இன்று உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி வரலாறு

முதன்மை கடவுளாக விளங்கும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுவது தொடர்பாக பல புராண கதைகள் உள்ளன. கஜமுகாசுரனை கொன்றதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்பது ஒரு ஐதீகம்.

உலகமெல்லாம் தோன்றுவதற்கு முன் தோன்றி, உலகில் எல்லா உயிர்களையும் தோற்றுவித்த ஆதியான சிவபெருமானின் அருள் பெற்ற கஜமுகாசுரன் அதாவது தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி கஜமுகாசுரன் வரம் பெற்று இருந்ததால், தான் பெற்ற வரத்தின் வல்லமைகளால் தலைகணம் கொண்டு தேவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்துள்ளான்.

கஜமுகாசுரன் கொடுமையில் இருந்து விடுபட செய்வதறியாமல் தேவர்கள் திணறி வந்த அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவ பெருமானிடம் சரணடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

விநாயகருக்கும், கஜமுகாசரனுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. போரின் முடிவில் எந்த ஆயுதங்களாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று கஜமுகாசுரன் வரம் பெற்றதால் தன்னுடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை சம்ஹாரம் செய்வார். பின்னர் கஜமுகாசுரனை மூஞ்சுறாக மாற்றி தனது வாகனமாக்கிக் கொண்டார் என்பது புராணங்களில் கூறப்படுகிறது. எனவே ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தீராத வினை தீரும் என்பதும், அனைத்து விதமான பாக்கியங்கள் நம்மை வந்து சேரும் என்பதும் ஐதீகம்.