கணவரை கொல்வதற்கு முன்… தன்னை புகழ்ந்து பேச வைத்து மனைவி…!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் என்ற காவலர் இவரது மனைவி ஷிவானி. இந்த தம்பதிக்கு 8 மற்றும் 6 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷின் நண்பரான டாக்சி டிரைவர் ராமாராவ் என்பவருடன் ஷிவானிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியது. இது ரமேஷிற்கு தெரிய வந்ததால் ஷிவானியை கண்டித்தார். கணவர் ரமேஷ் மூலம் தங்கள் தகாத உறவுக்கு தடை ஏற்படும் என்பதால் காதலனுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய ஷிவானி திட்டமிட்டார்.

இதனால் அவரை கடந்த 1-ம் தேதி அதிக மது ஊற்றி கொடுத்து பின்னர் காதலன் மற்றும் அவரது நண்பர் நீலா ஆகியோரை வரவழைத்து ஷிவானி தலையணையால் அமுக்கி கொலை செய்தார். மறுநாள் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஷிவானி நாடகமாடினார். இதுகுறித்து என்.வி.பி. காவல்துறை வழக்குப்பதிந்து விசாரித்து ஷிவானி, ராமாராவ் மற்றும் நீலா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், தனது கணவரை கொலை செய்வதற்கு முன்பு ஷிவானி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனது கணவருக்கு மட்டன் குழம்பு, மட்டன் தொக்கு ஆகியவற்றை சமைத்து ஷிவானி பரிமாறியுள்ளார். பின்னர் அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அப்போது தன்னை புகழ்ந்து பேசும்படி கூறி வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் காவலர் ரமேஷ் பேசுகையில், ‘எனது மனைவி மிகவும் தெளிவானவள். போதிய படிப்பறிவு இல்லாவிட்டாலும் வழிகாட்டினால் போதும், சிறப்பாக செயல்படக்கூடியவள், என் மனைவியே எனது வாழ்கை. நான் இருக்கும் வரை தைரியமாக இருப்பாள். நான் இறந்தாலும் அவள் தைரியமாக இருக்க வேண்டும். என் மனைவிதான் பெஸ்ட்’ என ஷிவானி பேச வைத்துள்ளார். அதன்பின்னர் ரமேஷை படுக்கை அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்துள்ளார்.

சினிமா மீது மோகம்.. பெண் காவல் ஆய்வாளர் செய்த காரியம்..

கடற்படையில் பணியாற்றிய ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சீனி மற்றும் ஸ்ரீதர். இவர்கள் தங்களிடம் இருந்த ரூ 1 கோடி மதிப்பிலான ரூ 2000 நோட்டுகளை 10 சதவீதம் கமிஷன் அடிப்படையில் மாற்ற திட்டமிட்டனர். அதற்காக அந்த நோட்டுகளை இடைத்தரகராக இருந்த சூரிபாபுவிடம் கொடுத்தனர். பணத்தை மாற்றிய சூரிபாபு 90 லட்சம் ரூபாய்க்கு ரூ 500 நோட்டு கட்டுகளை எடுத்துக் கொண்டு விசாகப்பட்டினம் கடற்கரை வழியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஸ்வர்ணலதா ஊர்க் காவல் படையினருடன் சேர்ந்து கண்காணிப்பு பணியில் இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சூரிபாபுவின் காரை தடுத்து நிறுத்தினார் ஸ்வர்ணலதா. பின்னர் காரை சோதனையிட்டு சூரிபாபு வைத்திருந்த பையை சோதனை செய்தார். அந்த பையில் கட்டுக்கட்டாக ரூ 500 நோட்டுகள் இருப்பதை கண்டார். உடனே இந்த பணம் ஏது, யாருடையது, எதற்காக கொண்டு செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இத்தகைய பணத்தை கொண்டு செல்ல ஏதாவது ஆவணம் இருக்கிறதா என கேட்டுள்ளார். ஆனால் சூரிபாபுவிடம் எந்த காரணமும் இல்லை ஆவணமும் இல்லை. இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த ஸ்வர்ணலதா, எனக்கு 20 லட்சம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை எடுத்துச் செல். இல்லாவிட்டால் ஆவணமின்றி பணம் கொண்டு செல்வதாக மொத்த பணத்தையும் பறிமுதல் செய்துவிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.

ஸ்வர்ணலதாவுடன் பேரம் பேசிய சூரிபாபு கடைசியாக ரூ 12 லட்ச ரூபாயை அவருக்கு கொடுத்துவிட்டு மீதமிருந்த பணத்தை எடுத்துச் சென்று பணத்தை சீனி, ஸ்ரீதரிடம் ஒப்படைத்து ஸ்வர்ணலதா குறித்தும் சூரிபாபு அவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கடற்படை அதிகாரிகள் இருவரும் நேராக விசாகப்பட்டினம் காவல் ஆணையர் விக்கிரமாவை சந்தித்து நடந்த விஷயத்தை புகாராக அளித்தனர்.

இதையடுத்து விக்கிரமா உத்தரவின் பேரில ஸ்வர்ணலதா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மேலும் இடைத்தரகர் சூரிபாபுவும் ஊர்க் காவல் படையினர் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஸ்வர்ணலதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமா மீது மோகம் கொண்ட ஸ்வர்ணலதா தற்போது நடன பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஏபி 31 எனும் படத்தில் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்து வருகிறாராம். சினிமா தயாரிக்க பணம் தேவை என்பதால் இப்படி மிரட்டி வாங்கி வருவதாக தெரிவித்தார்.