மின்விளக்கு முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் அட்டகாசம்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே உள்ள வானதிராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆர்.கே சிட்டி பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் மர்ம நபர்களால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகத்தால் பலமுறை புகார் தெரிவித்தும் மின் விளக்குகளை சரி செய்யாததால் இதனை சாதகமாக பயன்படுத்தி வரும் மர்ம நபர்கள் சிலர் தொடர்ந்து இப்பகுதியில் இரவு நேரங்களில் வீடுகளில் அத்துமீறி நுழைந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு திடீரென அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து நுழைய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அந்த மர்ம நபரை துரத்திச் சென்ற அப்பகுதியினர் பிடிக்க முற்பட்ட பொழுது மின்விளக்கு இல்லாமல் பகுதி முழுவதும் இருள் சூழப்பட்டு காணப்பட்டதால் பிடிக்க முடியாமல் திரும்பினார். வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகத்தில் கண்துடைப்பிற்காக போடப்பட்ட மின் விளக்குகள் பராமரிப்பின்றி எரியாத காரணத்தினால் கட்டுமான பணிகள் அதிகம் நடைபெற்று வரும் இப்பகுதியில் அண்மையில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் காப்பர் வயர்கள் உள்ளிட்ட பொருட்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டு முன் நுழைய முற்பட்டதால் அப்பகுதியினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

பொதுமக்களின் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் உடனடியாக பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும் எனவும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேரும் சகதியுமான சாலை.. கிராம சபையில் போடப்பட்ட தீர்மானத்தை காற்றில் பறக்க விட்ட ஊராட்சி நிர்வாகம்!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வானதி ராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆர் கே சிட்டி அமைத்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ள நிலைகள் பொதுமக்களில் அடிப்படை தேவையான சாலை வசதி இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர் வானதிராயபுரம் ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் ஊராட்சி திட்டங்கள் மற்றும் நிதியினால் வானதிராயபுரம் கிராம பகுதியில் மட்டுமே பல அரசு திட்டங்களும் என்.எல்.சி இந்தியா நிறுவன சுரங்கம் 1A அருகாமையில் உள்ள கிராமம் என்பதால் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல திட்டங்கள் வானதி ராயபுரம் கிராம பகுதியில் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இதுகுறித்து அப்பகுதியினர் தெரிவிக்கையில் ஆர் கே சிட்டி பகுதியில் தற்போது அதிக அளவில் குடியிருப்புகள் உருவாகி வருகின்றது இப்பகுதி இன்னும் வடலூர் நகராட்சி நிர்வாகத்தால் முறையாக ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பாடமல் உள்ளதாக தெரிவித்து வரும் வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகம் பல ஊராட்சி திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

கடந்தாண்டில் ஆர் கே சிட்டி பகுதியில் உள்ள ஒரே ஒரு தெருவிற்கு மட்டும் சாலை வசதி அமைக்கப்பட்டது.சாலை அமைக்க பொது இடம் இல்லை என்று கூறிவரும் வாணிதராயபுரம் ஊராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எந்த நிதியில் ஒரே ஒரு சாலையை அமைத்தது என்று கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இன்று வரை மீதமுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் மேற்கொள்ளபட வில்லை இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் கூலி வேலைக்கு செல்லும் தினக்கூலி தொழிலாளிகள் மற்றும் அலுவலக பணிக்கு செல்லும் பெண்கள் மருத்துவமனைக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் உதவியை நாடினாலும் ஆம்புலன்ஸ் வாகனம் மழைக்காலங்களில் இப்பகுதிக்கு வந்தால் சேற்றில் சிக்கிக் கொண்டு சிரமப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் சாலையை செம்மல் நிரப்பி சமன்படுத்தி கொடுக்குமாறு பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சாலை வசதி குறித்து கோரிக்கை வைத்தும் இன்று வரை சாலை வசதி மேற்கொள்ளாதது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு இதுபோன்று ஒரு நாள் மழைக்கே சேரும் சகதிமாக காட்சி அளிக்கும் RK சிட்டி பகுதியில் தற்காலிகமாக செம்மண் கிராவல் கொட்டி சாலையை சீர் செய்யாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது மேலும் மழை தொடர்ந்து பெய்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது.