திருப்பூரில் ஆண்களுக்கு வெறும்10 நிமிடத்தில் 3100 ரூபாய் தரும் அரசு…!

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,100, ஆட்சியரின் ஊக்கத்தொகையாக ரூ.1,000 உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 100 வழங்கப்படும் அதுவும் வெறும் 10 நிமிடம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவோ காலங்கள் மாறிவிட்டாலும் குடும்ப நல அறுவை சிகிச்சை என்று வந்துவிட்டால் பெண்கள் தான் செய்து கொள்கிறார்கள். ஆண்கள் செய்து கொள்வது என்பது மிக குறைவாகவே இருக்கிறது. ஆனால் குடும்ப நல அறுவை சிகிச்சை என்பது பெண்களை விட ஆண்களுக்கு செய்வது மிகவும் எளிது. அதேபோல் பெண்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நீண்ட நாள் ஓய்வெடுக்க வேண்டியது இருக்கும். இயல்பு நிலைக்கு திரும்ப நாட்கள் ஆகும்.

ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. வெறும் 10 நிமிடத்தில் செய்துவிட முடியும். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வழக்கம் போல் இல்லற வாழ்க்கை வாழமுடியும். ஆனால் குடும்ப நல அறுவை சிகிச்சை குறித்து தவறான புரிதல் காரணமாக ஆண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்வதை விரும்புவது இல்லை.. இதை ஊக்குவிக்க அரசு ஆண்களுக்கு ஊக்கத்தொகை அளித்து வருகிறது. ஆண்களுக்கான அறுவை சிகிச்சை என்பது வாசெக்டமி (Vasectomy) ஆகும். வாசெக்டமி என்பது விந்து வெளியேறுவதைத் தடுக்க ஆணின் விந்துக்குழாய் அல்லது விந்து நாளத்தைத் துண்டித்து, கட்டி வைத்து அல்லது அடைப்பிட்டு மூடி செய்யப்படும் நவீன, எளிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சை ஆகும். இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியத் தேவை இல்லை. புறநோயாளியாகச் சிகிச்சை பெற்றுக் கொண்டு, சிகிச்சை முடிந்தவுடன் வீட்டுக்குப் போகலாம். சிகிச்சை முடிந்த 2 மணி நேரத்துக்குப் பிறகு வீட்டில் செய்யும் சாதாரண வேலைகளைத் தொடர முடியும்.

இந்நிலையில் கோயம்புத்தூர். திருப்பூர் மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் கவுரி வெளியிட்ட அறிவிப்பில், “திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த சிகிச்சை பயிற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு 10 நிமிடங்களில் இலவசமாக செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,100, கலெக்டரின் ஊக்கத்தொகையாக ரூ.1,000 உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 100 வழங்கப்படும்” என கவுரி அறிவித்துள்ளார்.