கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, திருநறுங்குன்றம், பட்டியல் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி – செல்வி தம்பதிக்கு 18 வயது மகள் ரேகா. செல்வி கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள நண்பர் ஒருவர் மூலமாக பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து செல்வி தனது 18 வயது மகளை திருவான்மியூர் உள்ள எம்எல்ஏ மகன் வீட்டில் கடந்த வருடம் மே மாதம் பணிக்கு சேர்த்துள்ளார். பணிக்கு சேர்ந்த பின்னர் எம்எல்ஏ மகன் பேசிய சம்பளத்தை கொடுக்காமல் மிகவும் குறைந்து கொடுத்தாக கூறப்படுகிறது. மேலும் சம்பளம் கொடுக்காமல் அளவு அதிகமாக வேலை வாங்கியதால் சுதாரித்து கொண்ட அப்பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் தனக்கு வேலை பிடிக்கவில்லை, வீட்டுக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகிய இருவரும் இளம்பெண்ணை இரவு பகல் பார்க்காமல் வேலை வாங்கியதுடன் அவரது கை, கன்னம், முதுகு ஆகிய பகுதியில் சூடு வைத்து சித்திரவதைப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து விரிவாக வீடியோவில் இளம்பெண் விவரித்திருந்திருக்கிறார். இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் அரசியல் கட்சிகளும், சமூக செயற்பாட்டு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து, பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.