ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தேசிய தொல்குடியினர் சிறப்பு முகாம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் 300 பழங்குடியினர் பயனடைந்தனர். திருப்பூர் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தேசிய தொல்குடியினர் சிறப்பு முகாம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் திரவியம் முன்னிலை வகித்தார்.
தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மாபட்டி நரிக்குறவர் காலனியில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தேசிய தொல்குடியினர் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு. ஆதார் அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்கள் பெற்றனர் மற்றும் மருத்துவம் பார்த்தல் PM – கிசான் அட்டைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள், மக்கள் நிதி வசதி திட்ட அட்டைகள் மற்றும் வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் பிற சான்றிதழ்கள் ஆகியவை முகாமில் வழங்கப்பட்டன.
முகாம் குறித்து ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் பேசுகையில், முகாம்கள் பழங்குடியின சமூக மக்களின் நலனுக்காக நடத்தப்பட்டு அதன் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்பாடுகள் அவர்களை சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது. இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பழங்குடியினர் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ் வி செந்தில் குமாருக்கு பாசிமாலை, அணிவித்தும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ் வி செந்தில் குமாரை வாழ்த்தியும் அங்கிருந்து கலந்து சென்றனர். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு துணைத் தலைவர் சசிகுமார். உப்பாறு பாசன குழு உறுப்பினர் நாட்டு துறை, மற்றும் துறை சார்ந்த மருத்துவர்கள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.