லஞ்சப் பணத்தை மென்று விழுங்கிய அரசு அதிகாரி… !

நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் அவ்வப்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல், பொதுமக்கள் சிலரும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறையைத் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட நபர் குறித்து புகார் கொடுத்து, அதன்பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரும் இரசாயனம் தடவிய பணத்தை அதிகாரிகளிடமோ கொடுக்கும்போது அந்த இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைந்திருந்து அவர்களை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்யும்போது சில இடங்களில் அரசு அலுவலகங்களில் பணத்தை ஜன்னல் வழியாக வெளியே வீசி எறியும் சம்பவங்களும் நடைபெற்றதை நாம் படித்திருப்போம். ஆனால் இதையெல்லாம் விட மிக சுவாரஸ்யமான சம்பவம் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம், கட்னி பகுதியைச் சேர்ந்த சந்தன் சிங் லோதி. இவர் தனது நிலம் தொடர்பான விவகாரத்திற்காக கட்னி பகுதியில் உள்ள வருவாய் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு வருவாய்த்துறை அதிகாரியான கஜேந்திர சிங், என்பவர் சந்தன் சிங் லோதியிடம் ரூ. 5000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தன் சிங் லோதி, மத்தியப்பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் கொடுத்தார். அந்தப் புகாரை ஏற்ற ஜபல்பூர் சிறப்பு காவல்துறையினர் சந்தன் சிங் லோதியை, கஜேந்திர சிங்கிடம் அவர் கேட்ட பணத்தை தரும்படி கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சந்தன் சிங் லோதி, 5,000 ரூபாயை கஜேந்திர சிங்கின் தனி அலுவலகத்தில் வைத்து அவரிடம் அந்தப் பணத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறையினர் மறைந்திருந்ததை கஜேந்திர சிங் கண்டறிந்துள்ளார். அவர்களிடம் சிக்காமல் இருக்க தான் லஞ்சமாக வாங்கிய 5000 ரூபாயை உடனடியாக தனது வாயில் போட்டு அந்த நோட்டுகளை மென்று விழுங்கினார். இதனைக் கண்ட ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறையினர் உடனடியாக அவரை அந்த மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர் மென்று விழுங்கிய 5,000 ரூபாய் மீட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிகழ்வை தங்கள் கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரூ.1,000 கோடி சொத்து சேர்த்த தாசில்தார்… மிரண்டு போன பெங்களூரு..!

நாட்டில் பல மாநிலங்களில் அரசுத்துறை பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. அதுபோல இயக்கம் கர்நாடகாவில் இயங்கி வரும் இந்த அமைப்பு, அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்தி ஊழல் செய்த அரசு அதிகாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டுள்ளது.

அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை காட்டிலும், அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, புகார்கள் வந்த அரசு அதிகாரிகள் பற்றிய தகவல்களை லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்து வந்தனர். அவர்களது சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் பணிகளும் நடந்து வந்தது.

இந்நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் பல்வேறு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கட்டுக்கட்டாக பணம், குவியல், குவியலாக தங்க நகைகள், சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. அப்படி சிக்கிய அதிகாரிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதில், பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தாராக இருந்து வருபவர் அஜீத்குமார் ராய். இவரது வீடு, அலுவலகங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. கொடிகேஹள்ளி அருகே சககாரநகரில் உள்ள வீடு, சந்திரா லே-அவுட்டில் உள்ள வீடு ஆகிய இடங்களிலும் காவல்துறை சோதனை நடத்தினார்கள். அப்போது தாசில்தார் அஜீத்குமார் ராய்க்கு சொந்தமான 11 இடங்களிலும் இந்த சோதனை நடந்திருந்தது.

அப்போது தாசில்தார் அஜித்குமார் ராய் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், 700 கிராம் தங்க நகைகள், 5 சொகுசு கார்கள், 2 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள், பிரபல நிறுவனங்களின் 65 கைக்கெடிகாரங்கள், 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்கள் கைப்பற்றியது மட்டுமின்றி பல்வேறு இடங்களில் சொத்து வாங்கி அவர் குவித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

தனது பெயரிலும், தன்னுடைய மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பினாமி பெயர்களில் தாசில்தார் சொத்துகள் வாங்கி குவித்து இருக்கிறார். அதாவது பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் தற்போதைய மதிப்பு ரூ.300 கோடியில் 98 ஏக்கருக்கு நிலம் வாங்கி வைத்திருந்ததற்கான சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளது.

மேலும் கல்லூரு கிராமத்தில் 30 ஏக்கர் நிலமும், பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் 18 ஏக்கருக்கு பண்ணை வீட்டை அவர் வாங்கியதும் தெரியவந்தது. அதன் மூலம் தாசில்தார் அஜித்குமார் ராய் சட்டவிரோதமாக சுமார் ரூ.1,000 கோடிக்கு சொத்து குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தாசில்தார் அஜித்குமார் ராய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது உறுதியானதை தொடர்ந்து தாசில்தார் அஜித்குமார் ராயை லோக் ஆயுக்தா காவல்துறை அதிரடியாக கைது செய்தார்கள்.

அஜீத்குமார் வீட்டில்: லோக் ஆயுக்தா திடீர் சோதனையில் ரூ.2½ கோடி மதிப்பு சொகுசு கார் சிக்கியது

கர்நாடக மாநிலத்தில் அரசுத்துறை பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. இந்த பிரிவு அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்தி ஊழல் செய்த அரசு அதிகாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர்.

அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை காட்டிலும், அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து, புகார்கள் வந்த அரசு அதிகாரிகள் பற்றிய தகவல்களை லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்து வந்தனர். அவர்களது சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் பணிகளும் நடந்து வந்தது.

இந்நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில், பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தாராக இருந்து வருபவர் அஜீத்குமார் ராய். இவரது வீடு, அலுவலகங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. கொடிகேஹள்ளி அருகே சககாரநகரில் உள்ள வீடு, சந்திரா லே-அவுட்டில் உள்ள வீடு ஆகிய இடங்களிலும் காவல்துறை சோதனை நடத்தினார்கள். அப்போது தாசில்தார் அஜீத்குமார் ராய்க்கு சொந்தமான 11 இடங்களிலும் இந்த சோதனை நடந்திருந்தது.

அப்போது அஜீத்குமார் ராய் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், 5 சொகுசு கார்கள், 10 வீடுகள் இருப்பதற்கான சொத்து ஆவணங்கள் காவல்துறையிரிடம் சிக்கியது. அவரிடம் இருக்கும் சொகுசு கார்களின் மதிப்பு மட்டும் ரூ.2½ கோடி என்று கூறப்படுகிறது. அஜீத்குமார் ராய் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அதனால் அங்குள்ள அஜீத்குமார் ராய்க்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

அவரது வீட்டில் இரவு வரை தொடர்ந்து சோதனை நடைபெற்றது. ஏற்கனவே தாசில்தார் அஜீத்குமார் ராய் முறைகேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.