தடுப்பூசி போட்டும் பயனில்லை..! ரேபிஸ் நோய்க்கு மேலும் ஒரு சிறுமி பலி..!

கேரள மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்து வரும் நிலையில் இங்கு தெருநாய் கடித்து ஏராளமாமனோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். தெருநாய் கடித்ததன் காரணமாக ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளான 2 குழந்தைகள் ஏற்கனவே இருந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுமி பலியாகியிருக்கிறாள்.

மனிதர்களின் செல்லப்பிராணியான களுரேபிஸ் வைரஸால் அல்லது RABV நாய்கள் பாதிக்கப்பட்டு நாய்களின் உமிழ்நீர் கடிக்கப்பட்டோ அல்லது கீறப்பட்டோ மனிதனுக்கு களுரேபிஸ் வைரஸ் பரவுகிறது. இந்த விலங்கின் உமிழ்நீர், மூளை அல்லது நரம்பு மண்டல திசுக்களுடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம், அதாவது உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயில் உள்ள உடைந்த தோல் அல்லது சளி சவ்வுகள் மூலம் பரவுகிறது. இந்த ரேபிஸ் ஆபத்தானது ஆனால் தடுக்கக்கூடியது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தேஞ்சிப் பாலம் பெருவள்ளூர் காக்கத்தடம் பகுதியை சேர்ந்த சல்மானுல் பாரிஸின் மகள் சியா பாரிஸ். 6 வயது சிறுமியான சியா, கடந்த மாதம் மார்ச்)29-ந் தேதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார். அப்போது அந்த பகுதியில் சாலையில் நின்று கொண்டு இருந்த ஒரு தெரு நாய், சிறுமியை துரத்தி கடித்தது. சிறுமியின் தலை, கால் உள்ளிட்ட இடங்களில் தெருநாய் கடித்து குதறியது. சிறுமி மட்டுமின்றி அவரை காப்பாற்ற முயன்ற பெண் உள்பட 5 பேரையும் அந்த நாய் கடித்தது.

தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி, சம்பவம் நடந்த 2 மணி நேரத்திற்குள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வெறி நாய் கடிக்கான தடுப்பூசி போடப்பட்ட சிறுமி சியா பாரிஸ் பரிதாபமாக இறந்தாள். அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்தது. வெறிநாய் கடித்த சிறுமி ரேபிஸ் நோய் தாக்கி பலியான சம்பவம் மலப்புரத்தில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள விளக்குடியைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஏப்ரல் 8 -ஆம் தேதி நாய் கடித்த நிலையில் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட போதிலும், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உரிழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், மீண்டும்,கொல்லம் மாவட்டம் குன்னிக்கோடு பகுதியை சேர்ந்த நியா பைசல் என்ற சிறுமி கடந்த மாதம் தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அவரை ஒரு தெருநாய் கடித்தது. இதையடுத்து சிறுமி நியா அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது. 3 டோஸ் தடுப்பூசிகளும் சிறுமிக்கு போடப்பட்டு இருக்கிறது. இறுதி டோஸ் நாளை போட திட்டமிடப் பட்டிருந்த நிலையில், சிறுமிக்கு திடீரென காய்ச்சல் அடிக்க தொடங்கியது. மருத்துவனையின் தீவிர சிகிச்சை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நியா பரிதாபமாக இறந்தாள். சிறுமிக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருந்தது சோதனையில் தெரியவந்தது. தடுப்பூசிகள் போடப்பட்டும் சிறுமி இறந்திருப்பது, அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.