கர்நாடகாவில் மாமியாருடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியாயி ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் லோக்நாத் சிங் பெங்களூரிலுள்ள சிக்கபனாவரா பகுதியில் இருந்த ஒரு காரில் சடலம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த கொலை தொடர்பாக லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை காவல்துறை கைது செய்தனர்.
லோக்நாத் சிங்கின் மனைவி, மாமியார் ஆகியோர் அவரது உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயங்கிய பிறகு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்தனர். திருமணத்தை மீறிய உறவு, சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் லோக்நாத் சிங் ஈடுபட்டு வந்ததால் அவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.