நீதிமன்ற ஊழியர் பணிக்கு நியமன ஆணை கொடுத்து 68 பேரிடம் ரூ.3.5 கோடி மோசடி..!

தேனி மாவட்டம், அல்லிநகரத்தைச் சேர்ந்த சுருளிவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில், திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திர குமார் என்பவர் 2019-ல் பழக்கமானார். அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலரையும் தனக்குத் தெரியும் என்றும், அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். இதை நம்பி நான், எனது உறவினர்கள், நண்பர்கள் உட்பட 68 பேர் மொத்தம் ரூ.3.5 கோடியை அவரிடம் அளித்தோம்.

சில மாதங்களுக்குப் பின்பு நீதிமன்ற ஊழியராக பணியில் சேருவதற்கான நியமன ஆணைகளை நாகேந்திர குமார் வழங்கினார். ஆனால், அவை போலியானவை என்பது தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி ரசீதுகள் மூலம் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் ரூ.35 லட்சம் மோசடி

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் சதர்ன் அகாடமி ஆஃப் மரைடைம் ஸ்டடீஸிஸ் என்ற பெயரில் கடல்சார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் தலைமை அலுவலகம் மயிலாப்பூர் ஆர்.கே.சாலையில் உள்ளது. சதர்ன் அகாடமி ஆஃப் மரைடைம் ஸ்டடீஸிஸ் கல்லூரியின் கணக்காளராக காமினி மற்றும் விளம்பர அதிகாரியாக வெங்கடேசன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், கல்லூரியின் ஆண்டு வருவாய் கணக்கை ஆய்வு செய்தபோது, மாணவர் சேர்க்கை மற்றும் கல்லூரி கட்டணத்தில் இருவரும் போலி ரசீதுகள் மூலம் ரூ.35 லட்சம் வரை போலி கணக்குகள் காட்டி மோசடி செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரியின் நிர்வாக அதிகாரி அசோகன், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணை நடத்திய போது, ரூ.35 லட்சத்தை கணக்காளர் காமினி மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மோசடி செய்தது உறுதியானது.

அதைதொடர்ந்து காவல்துறை இருவர் மீதும் ஐபிசி 406 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். காவல்துறை தங்கள் மீது வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்த பெண் கணக்காளர் உள்பட 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதற்கிடையே, தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் திருவொற்றியூர் சின்ன மேட்டுப்பாளையம் 5-வது தெருவை சேர்ந்த வெங்கடேசனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காமினியை காவல்துறை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

1,315 பேரிடம் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.36.13 கோடி மோசடி செய்த ஆசாமி கைது

1,315 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமரேசன் மற்றும் சிலர், தாங்கள் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றனர். பாலகுமரேசன் முப்பிலிவெட்டி பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மனைவி சண்முகலட்சுமிடம் தாங்கள் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால் நல்ல சம்பளத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சண்முகலட்சுமி ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார்.

ஆனால் அரசு பள்ளி ஆசிரியர் வேலையை வாங்கித் தராமல் இழுத்தடித்து உள்ளனர். இதனால் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் கயவன் கைகளில் சிக்கி கொண்டதே என்று பதறிய சண்முகலட்சுமி தொண்டு நிறுவனத்தின் மீது தூத்துக்குடி குற்றப் பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி குற்றப் பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டது . இந்த விசாரணையில், பாலகுமரேசன் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் 1,315 பேரிடம் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி மொத்தம் ரூ.36 கோடியே 13 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பாலகுமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கூரியர் நிறுவனம் என பேசி…! ஸ்கைப் லிங் அனுப்பி…! மொத்தமா ரூ. 27 லட்சத்து 46 ஆயிரத்து 101 ஆட்டைய போடா ஆசாமி…!

நவீன தொழில் நுட்பம் வளர வளர மோசடிகளும் புதுப்புது வழிகளில் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. மேலும் இணைய வழி பரிவர்த்தனை மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டதால் சைபர் கொஞ்சம் அசந்தாலும் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு அபேஸ் செய்து விடுவது குறித்த செய்திகளையும் பார்க்கிறோம். அதன் வரிசையில், சென்னை மதுர வாயலை சேர்ந்த ராஜசேகரன் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 13 -ம் தேதி வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு ராஜசேகரன் சென்று இருந்தார்.

அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பிரபல தனியார் கூரியர் நிறுவனத்தின் மேலாளர் என்றும் உங்கள் பெயரில் ஒரு வங்கியில் இருந்து ஏடிஎம் கார்டு ஒன்றும் அதனுடன் பார்சலும் வந்துள்ளது. அந்த பார்சலில் போதைப்பொருள் உள்ளது. எனவே, நாங்கள் காவல்துறையில் புகாரளித்து இருக்கிறோம். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் சைபர் கிரைம் காவல்துறையும் விசாரணை மெற்கொண்டு வருகிறார்கள் எனக் கூறியுள்ளார்.

விசாரிக்க தங்களுடன் காவல்துறை வருவார்கள் என்று மிரட்டியுள்ளார். காவல்துறையில் சிக்காமல் இருக்க நான் ஒரு ஐடியா தருகிறேன் என்று அந்த மர்ம நபர் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த ராஜசேகரனிடம் ஸ்கைப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கூறி ஸ்கைப் லிங்கை ராஜசேகரன் மொபைல் எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.கொஞ்சமும் யோசிக்காமல் ராஜசேகரன் உடனே லிங்கை கிளிக் செய்து தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது திடீரென தனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில், தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பித்ததாகவும் அதன் படி ரூ.19 லட்சம் அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.

பின்னர் ஒரு சில நொடிகளில் அந்த பணம் வங்கிக் கணக்கில் இருந்து மாயமானது. மேலும் ராஜசேகரன் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.7 லட்சமும் மாயமானது. வங்கிக் கடன் பெற்றது மற்றும் ஏற்கனவே இருப்பில் இருந்த பணமும் சேர்த்து என மொத்தமாக ரூ. 27 லட்சத்து 46 ஆயிரத்து 101 ரூபாய் மாயமானது. அப்போது தான் தனக்கு போன் செய்தது மோசடி நபர் என்றும் அனுப்பப்பட்டது ஸ்கைப் லிங்க் இல்லை என்றும் தனது போனை கட்டுப்பாட்டில் எடுக்கும் லிங்க் என்பதையும் கண்டறிந்துள்ளார். இதையடுத்து கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது உங்களுக்கு ஒரு பார்சலும் வரவே இல்லை என்றும் கைவிரித்தார்கள். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ராஜசேகரன் உடனடியாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறைக்கு புகாரளித்துள்ளார்.

கவர்னரிடம் விருது வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி ..!

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைவி 3 ஆட்ஸ் என்ற எம்எல்எம் ஆன்லைன் நிறுவனம் செயல்படு வருகிறது. இந்த நிறுவனத்தில் .ஆன்லைன் மூலம் விளம்பரங்கள் பார்ப்பது, பொருட்களை வாங்குவது, ரேட்டிங் தருவது உள்ளிட்ட பணிகளை செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சுலபமாக சம்பாதிக்கலாம் என யூ டியூப் சேனல்களிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இந்த நிறுவனத்திற்கு ஏராளமானோர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

உறுப்பினர்களுக்கு தினமும், 100 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை அவர்களின் விளம்பரம் தேடல், ரேட்டிங்கிற்கு ஏற்ப பணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு உரிய அனுமதியின்றி ஆயுர்வேத மாத்திரைகளை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் மோசடியான முறையில் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து வருவதாக கோயம்புத்தூர் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பீளமேடு பகுதியை சேர்ந்த சத்தி ஆனந்தன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு எதிராக பலர் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். இதேபோல், நேற்று சிலர் கோயம்புத்தூர் மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்போது பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில், மை வி3 நிறுவனத்துக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தற்போது மேலும் 10 பேர் கொடுத்த புகாரை அளித்துள்ளோம். மை வி3 உரிமையாளர் விஜயராகவன் யுனிசெப் அமைப்பை உருவாக்கி அதன் தேசிய இயக்குனராக இருந்துள்ளார். அதன் மூலம் தனக்கு தானே போலியான டாக்டர் பட்டம் கொடுத்துள்ளார். மேலும் தனது நிறுவனத்தில் உள்ளவர்கள் 200 பேருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்துள்ளார்.

அதனை வீடியோ ஆதாரத்துடன் புகாரில் கொடுத்துள்ளோம். இந்த நிறுவனத்தில் உள்ள இக்னிசியஸ் பிரபு என்பவர் மதுரையை சேர்ந்த ஒருவரிடம் கவர்னரிடம் விருது வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்துள்ளார். இந்த நிறுவனத்தில் ரூ.190 மதிப்பிலான ஹெர்பல் தயாரிப்புகளை ரூ. 3900 க்கு விற்பனை செய்துள்ளனர். இந்த மருந்துகளை தயாரிப்பவர் 10-வது பெயிலானவர். இவர் மத்திய அரசின் பாரத் சேவக் சமாஜ் அமைப்பில் உள்ளார். இவருக்கும் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி தெரித்தார்.

அமலாக்கத்துறை என கூறி ரூ.1.69 கோடி பணம் பறித்த 5 பேர் கைது

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலை குமரன் நகர் 3-வது வீதியை சேர்ந்த நூல் கமிஷன் வியாபாரி அங்கு ராஜ்மற்றும் திருப்பூர் பி.என். சாலையை சேர்ந்த துரை என்ற அம்மாசை இருவரும் நண்பர்கள். கடந்த மாத இறுதியில் இவர்களுக்கு வாட்ஸ் – அப் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த விஜய் கார்த்திக் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். மேலும், தங்களது நிறுவனத்தினர் வியாபார ரீதியான பணப் பரிவர்த்தனை செய்ததில் வெளி நாடுகளில் இருந்து வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கில் பணம் பெறப்பட்டு இருப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தங்கள் நிறுவனத்தின் சார்பில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற ஊர்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு கட்டுமானப் பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட இதர செலவுகளுக்கு ரொக்கத் தொகை தேவைப்படுகிறது. எனவே, எங்களுக்கு ரொக்கத் தொகை கொடுத்தால், அதே அளவுக்கு இரட்டிப்பாக உங்களது வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என அந்நபர் தெரிவித்தார். இதை நம்பிய அங்கு ராஜ், அம்மாசை ஆகியோர் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து மொத்தமாக ரூ.1 கோடியே 69 லட்சம் பெற்றனர்.

பின்னர், அதை வீடியோ எடுத்து தங்களிடம் பேசிய விஜய் கார்த்திக்குக்கு அனுப்பினர். அதன் பின்னர், சிறிது நேரத்தில் அங்கு ராஜ் கடைக்கு வந்த 5 பேர், தங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் என்றும், இங்கு கணக்கில் வராத கருப்புப் பணம் இருப்பதாகவும் கூறி கடையை சோதனை யிட்டனர். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1.69 கோடியை உரிய ஆவணங்கள் இல்லாததால் எடுத்துச் செல்வதாகவும், அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வந்து விசாரணைக்கு பின்னர் பெற்றுக் கொள்ளுமாறும் அவர்கள் கூறிச் சென்றனர்.

அந்நபர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு காவல்துறையில் அங்கு ராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் 4 தனிப் படைகள் அமைத்து காவல்துறை விசாரித்தனர். அதில், நாமக்கல் மாவட்டம் கல்லாங்காட்டு வலசு வெப்படை சாலையை சேர்ந்த விஜய் கார்த்திக், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த நரேந்திரநாத், கோயம்புத்தூர் சுண்டாக்காமுத்தூரைச் சேர்ந்த ராஜ சேகர், டாடாபாத்தை சேர்ந்த லோகநாதன், மேட்டூரை சேர்ந்த கோபி நாத் ஆகியோருக்கு இந்த மோசடியில் தொடர் பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.88.66 லட்சம், 2 கார்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

‘விளம்பரம் பார்த்தால் பணம்’ என கூறி மோசடி..! தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலைக்கு என்ன தொடர்பு ..!?

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைவி 3 ஆட்ஸ் என்ற எம்எல்எம் ஆன்லைன் நிறுவனம் செயல்படு வருகிறது. இந்த நிறுவனத்தில் .ஆன்லைன் மூலம் விளம்பரங்கள் பார்ப்பது, பொருட்களை வாங்குவது, ரேட்டிங் தருவது உள்ளிட்ட பணிகளை செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சுலபமாக சம்பாதிக்கலாம் என யூ டியூப் சேனல்களிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இந்த நிறுவனத்திற்கு ஏராளமானோர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

உறுப்பினர்களுக்கு தினமும், 100 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை அவர்களின் விளம்பரம் தேடல், ரேட்டிங்கிற்கு ஏற்ப பணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு உரிய அனுமதியின்றி ஆயுர்வேத மாத்திரைகளை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் மோசடியான முறையில் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து வருவதாக கோயம்புத்தூர் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பீளமேடு பகுதியை சேர்ந்த சத்தி ஆனந்தன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக தங்களது ஆதராவளர்களை சட்டவிரோதமாக ஒன்று கூட்டினார்.

இதுதொடர்பாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்புத்தூர் குற்றப்பிரிவு காவல்துறை சத்தி ஆனந்தனை நேற்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி, கோயம்புத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநகர குற்றப்பிரிவில் சத்தி ஆனந்தன் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நிறுவனம் குறித்தும், அதில் உள்ள உறுப்பினர்களுக்கு விளம்பரம் பார்த்தால் வழங்கப்படும் தொகை குறித்தும் விசாரிக்கப்பட்டது.

பண சுழற்சி முறையில் இந்த திட்டம் நடக்கிறதா?, எவ்வளவு பேரிடம் முதலீடு பெறப்பட்டது?, எப்படி தொகையை திருப்ப தர முடியும்?, எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது? என சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் காவல்துறை விசாரணை நடத்தினர். இந்நிலையில், நிறுவனத்தால் மோசடிக்கு ஆளானவர்கள் தரப்பில் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவர் கோயம்புத்தூர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மேலும் கடலூரை சேர்ந்த ரவி பாண்டிச்சேரியில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். அதில் மருத்துவர்கள் பரிந்துரைக்காத வசிய மாத்திரைகள் தயாரித்து இந்த மை வி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார். இந்த ரவிதான் சத்தி ஆனந்தனை கூட்டி சென்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்திக்க வைத்துள்ளார்.

விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் எனக் கூறி நூதன MLM மோசடி..!

மொபைல் ஆப்பில், விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என ஏமாற்றி லட்சக்கணக்கானோரிடம் நூதன MLM மோசடி நடைபெறுவதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக கோயம்புத்தூர் மாநகர குற்றப்பிரிவு காவல்துறை, கடந்த ஜனவரி 19-ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரூ.300 கட்டி, ஆப்பில் சேர்ந்து, விளம்பரம் பார்த்தால், தினசரி ரூபாய் 4 வங்கி கணக்கில் ஏறும். முதலீட்டு தொகை அதிகரிக்க அதிகரிக்க வருமானமும் அதிகரிக்கும்.

ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் கட்டி ஆயுர்வேத கேப்சூல்கள் வாங்கிக் கொள்ளலாம். அப்போது விளம்பரம் பார்த்தால் தினசரி ரூ.400 வருமானம் கிடைக்கும். மேலும், நீங்கள் மற்றவர்களை உறுப்பினராகச் சேர்த்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் கூறி MyV3 Ads நிறுவனம் லட்சக்கணக்கானோரிடம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டதாக MyV3 Ads எம்.டி சக்தி ஆனந்த் மீது 5 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்காக, மை வி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்த் கோயம்புத்தூர் மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.

மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் லட்சக்கணக்கில் நூதன மோசடி…!

சென்னை, கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் மருத்துவ கல்லூரி, சட்ட கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி என SRM தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பல்கலைக்கழகம் சார்பாக மறைமலைநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், தங்களது பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில், மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்பு படித்து தோல்வியடையும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் கூறி, ஒரு கும்பல் பணம் பெறுவதாக கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பணம் கொடுத்த மாணவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

அதில், மாணவர்களிடம் நூதன முறையில் பேசி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த கன்னியாகுமரியை சேர்ந்த வருண் கார்த்திக் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த காவல்துறை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து வருண் கார்த்திக்கிற்கு உதவியாக இருந்த அவரது தம்பி எழிலரசு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் பிரகாஷ் ஆகியோரையும் காவல்துறை கைது செய்தனர். இந்த 3 பேரிடம் இருந்து ரூ.13,20,000 ரொக்கம், ஒரு மடிக்கணினி, 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மோசடி புகாரில் பணியிடை நீக்கமான கல்லூரி பெண் முதல்வர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

1970-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியில் செயல்பட்டு வரும் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி‌. இந்தக் கல்லூரியில் முதல்வராக 2018-ம் ஆண்டு முதல் கோ.கீதா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு அந்தப் பதவியையும் கோ.கீதா வகித்து வந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மாணவர்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் மேலும் கோ.கீதா மீது, கல்லூரி கல்வி இயக்குநர் பதவிக்கு வர 5 கோடி பணம் கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை முறைகேடாகப் பேராசிரியர்களை நியமனம் செய்து பெற்றதாகவும் கோ.கீதா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் அவர் அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கோ.கீதா மீது புகார் எழுந்ததுள்ளன. தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் தனராஜன் திருவாரூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநர் கோ.கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.