திருப்பத்தூர் மாவட்டம் ப.முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த முனிகண்ணன் மற்றும் பிரபாவதி ஆகியோரது மகன் திருப்பதி . இவரும், அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகளான நீலாம்பரியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து நீலாம்பரியின் பெற்றோர் இவர்களது காதலை ஏற்றுக்கொண்டனர்.இதையடுத்து இருவரும் பெண்ணின் வீட்டிலேயே 2 மாதங்களாக மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்த திருப்பதி, திருமணம் முடிந்த 60 நாளில் பெற்றோர்களிடம் பேசி அழைத்து செல்வதாக கூறி ஒரு மாதத்திற்கு முன்பு தன் வீட்டிற்கு சென்ற திருப்பதி தலைமறைமாகி விட்டதாக கூறப்படுகிறது. காதல் கணவன் பிரிந்து சென்றதால் அதிர்ச்சி அடைந்த நீலாம்பரி ஏன் பிரந்து சென்றாய் என்று திருப்பதியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது திருப்பதி எனக்கு ரூ.25 லட்சம் ரொக்கம், 30 பவுன் நகை மற்றும் திருப்பத்தூரில் சொகுசு வீடு வாங்கி தர வர வேண்டும் என்பது என் பெற்றோரின் விருப்பம் அது இப்போது என் விருப்பமும் கூட ஆகையால் நீ ரூ.25 லட்சம் ரொக்கம், 30 பவுன் நகை மற்றும் திருப்பத்தூரில் சொகுசு வீடு இத்துடன் வா..இல்லை என்றால் உன்னோடு வாழ முடியாது என கூறி நீலாம்பரியின் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார்.
இதுகுறித்து நீலாம்பரி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நீலாம்பரி, தனது கணவர் திருப்பதியின் வீட்டிற்கு சென்று தன்னை கணவனுடன் சேர்த்து வைக்கும்படி கோரியிருக்கிறார். ஆனால் இதற்கு மாமனார், மாமியார் மசிவதாக தெரியவில்லை.
இதனைத்தொடர்ந்து தன்னை வீட்டில் சேர்க்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த திருப்பதியின் தாயார் திடீரென விஷம் குடித்துள்ளார். கணவனுடன் சேர்த்து வைக்க கோரி மனைவி போராட்டம் நடத்திய நிலையில், மாமியார் விஷம் குடித்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.