காவல்துறையினரின் அலட்சியத்தால் சிவகங்கையில் கொடூரம்..! பட்டியலின மாணவன் கை வெட்டு ..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புல்லட் வாகனம் அடித்து உடைத்து சம்பவம் தொடர்பாக இருவர் மீது புகார் உள்ள நிலையில் கல்லூரி மாணவன் புல்லட் வாகனத்தில் வீட்டை நோக்கி வரும்போது வழிமறித்து, கையை வெட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேளக்காடாவர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக ராமன் – செல்லம்மா தம்பதியினர் மகன் அய்யாசாமி சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அய்யாசாமியின் தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்ததன் காரணமாக, அவரின் தாய் செல்லம்மா, அய்யாசாமியின் சித்தப்பா பூமிநாதனை திருமணம் செய்து ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உழைப்பால் பொருளாதார ரீதியாக ஓர் அளவிற்கு முன்னேறிய பூமிநாதன், கடந்த ஆண்டு புல்லட் வாகனத்தை வாங்கி இருக்கிறார்.

இது அங்கிருந்த சில முன்னேறிய சாதி இளைஞர்களுக்கு பூமிநாதனுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்த நிலையில், புல்லட் வாகனம் வாங்கியதால் கூடுதல் விரக்தியடைந்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பூமிநாதனின் புல்லட் வாகனத்தை 2 இளைஞர்கள் சேர்ந்து அடித்து உடைத்து இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பூமிநாதன் மற்றும் அய்யாசாமி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நேற்று கல்லூரியை முடித்து அய்யாசாமி புல்லட் வாகனத்தில் வீட்டை நோக்கி வந்து இருக்கிறார். அப்போது 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து, பட்டியலின ஜாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” என்று கூறி அய்யாசாமியின் கையை வெட்டி இருக்கின்றனர்.

அங்கிருந்து தப்பியோடிய அய்யாசாமி, விரைவாக பெற்றோரிடம் சென்றுள்ளார். அதன்பின் அவருக்கு உடனடியாக மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அய்யாசாமிக்கு வெட்டப்பட்ட கையை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதனிடையே அய்யாசாமியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள், வீட்டை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிப்காட் காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த வல்லரசு, ஆதி ஈஸ்வரன் மற்றும் வினோத் ஆகிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிவகங்கை கொடூரம் பட்டியலின ஜாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம்..!

“பட்டியலினத்தில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” என கூறி 3 பேர் கொண்ட கும்பல் கையை வெட்டியுதுடன், புல்லட் வாகனத்தை அடித்து உடைத்து சூறையாடிய இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேளக்காடாவர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக ராமன் – செல்லம்மா தம்பதியினர் மகன் அய்யாசாமி சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

அய்யாசாமியின் தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்ததன் காரணமாக, அவரின் தாய் செல்லம்மா, அய்யாசாமியின் சித்தப்பா பூமிநாதனை திருமணம் செய்து ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உழைப்பால் பொருளாதார ரீதியாக ஓர் அளவிற்கு முன்னேறிய பூமிநாதன், கடந்த ஆண்டு புல்லட் வாகனத்தை வாங்கி இருக்கிறார்.