லலிதாம்பிகை அதிரடி: தாராபுரத்தில் லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்ட மேரியோ ஜூஸி கடைக்கு சீல்..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய லலிதா அம்பிகை தலையில் அலுவலர்கள், பிரியாணி ஓட்டல்கள், துரித உணவு விற்பனை நிலையங்கள், ஃபாஸ்ட் போட்டு பானி பூரி கடைகள், பெட்டிக்கடை, பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 25 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரு கடையில் காலாவதியான பிஸ்கட் மற்றும் தின்பண்டங்களை பறிமுதல் செய்தனர் ‌. அப்போது தாராபுரம் நகரில் பல்வேறு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்தனர்.

தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா மெஸ் கடையில் கெட்டுப்போன சிக்கன் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவற்றை பினாயில் ஊற்றி அளித்தார். அதன் பிறகு அக்கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பேருந்து நிலையம் அருகில் தள்ளு வண்டியில் வைத்திருந்த நூடுல்ஸ், பாணி பூரி, ரைஸ், பழைய என்னை ஆகிய கெட்டுப் போன உணவுகளை பறிமுதல் செய்து அவற்றை அளித்தார். பிறகு தரமற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுமட்டுமின்றி மேரியோ ஜூஸி கடையில் பழைய இறைச்சிகள், அழுகிய பழங்கள் மற்றும் காலாவதியான உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து, உடனடியாக அழித்தனர். பிரியாணி தயாரிக்கும் ஓட்டல்களிலும், அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இது குறித்து திருப்பூர் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் திருமதி லலிதாம்பிகை பேசுகையில், ளிர்சாதன பெட்டிகளில், கோழிக்கறி, இறைச்சி ஆகியவற்றை இருப்பு வைத்தும், கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தக்கூடாது. உணவுப்பொருட்கள் தயாரிக்கும் போது, ரசாயனம் கலந்த நிறமூட்டிகள் சேர்க்கக்கூடாது. ஓட்டல்கள், பேக்கரிகளில், ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. உணவுப்பொருட்களில், காலாவதி தேதி, தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும். சூடான உணவு பொருட்களை பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுப்பதையும் செய்தித்தாளை பயன்படுத்தி உணவு பொருட்கள் கொடுப்பதையும் முற்றிலும் நிறுத்த வேண்டும் உணவகங்கள் பேக்கரி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்களை கையாள்வது பற்றி அறிந்திருக்க வேண்டும் போலி டீ தூள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு பொருள் தரம் மற்றும் கலப்படம் குறித்து மக்கள் புகார் அளிப்பதற்காக whatsapp எண் 94440 42322 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் புகார் தெரிவிக்கும் நபர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். புகார் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட கடைகள் மீது துரை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தார்.

மேலும் Fssai விற்பனை செய்வோர் சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டும் அதேபோல விற்பனை செய்பவர்களும் Fssai உள்ள உணவுப் பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும். கடைக்காரர்கள் தேதி பதிவிட்டுள்ள காலன்களை வாங்க வேண்டும் அதை தகுந்த முறையில் பதப்படுத்தி உணவு தயாரிக்க வேண்டும். அமைக்கக்கூடிய தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக இருக்க வேண்டும். என தெரிவித்தார்

இறந்த கோழிகள் நோய்வாய்ப்பட்ட கோழி இறைச்சிகள் ஆகியவற்றை தாராபுரத்தில் உள்ள மதுபான பார்களில் குறைந்த விலையில் சில்லி சிக்கன் 65 என விற்பனை செய்கிறார்கள் என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு கோழி பண்ணைகளுக்கும் மதுபானவர்களுக்கும் தொடர்ந்து இனி ஆய்வுகள் நடத்தப்படும் என தெரிவித்தார்

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் மற்றும் பழச்சாறுகளை பருகியவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அந்த மேரியோ ஜூஸி என்ற கடையை தற்பொழுது ஆய்வு செய்து 28 கிலோ கெட்டுப்போன பொருட்களை அப்புறப்படுத்தியதுடன் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் அவர்கள் கடையின் விற்பனைச் சான்றிதழ் இல்லாமலேயே கடையை இயக்கி வந்துள்ளனர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் ஆன்லைனில் கடைக்கு லைசென்ஸ் அப்ளை செய்துள்ளனர் என லலிதாம்பிகை தெரிவித்தார்.

மேரியோ ஜூஸி கடையில் எல்லாமே கெட்டுப்போன பொருட்கள்..! நீங்களே வந்து பாருங்க..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கோவை தலைமை இடமாகக் கொண்ட மேரியோ ஜூஸி என்ற உணவு கடை செயல்பட்டு வருகிறது. இந்த மேரியோ ஜூஸி கடை தமிழக முழுவதும் 40-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தாராபுரத்தில் புதிதாக துவங்கப்பட்டு மேரியோ ஜூஸி கடையில் ஒரு சிக்கன் வாங்கினால் ஒரு சிக்கன் இலவசம் போண்ற பல இலவச சலுகைகள் அறிவித்து மக்களை கவர்ந்து வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அப்துல் ரகுமான் மற்றும் ஆசாத் குடும்பத்தினர் மேரியோ ஜூஸி கடைக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் ஜூஸ் மற்றும் சிக்கன் வகைகளை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்ட போது, சிக்கனில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டு அதிரிச்சியடைந்த அப்துல் ரகுமான் மற்றும் ஆசாத் குடும்பத்தினர் கடையில் பணியாற்றிய ஊழியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், ஊழியர்கள் முறையான பதில் அளிக்காததால் கோபமடைந்த அப்துல் ரகுமான் மற்றும் ஆசாத் குடும்பத்தினர் மேரியோ ஜூஸி கடையின் சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல வகைகள் மற்றும் இறைச்சி வகைகளும் துர்நாற்றம் வீசியது மட்டுமின்றி பூசணம் பிடித்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இந்த மேரியோ ஜூஸி கடையில் பல ஆபர்களைத் தந்து பொதுமக்களை கவர்ந்து கெட்டுப்போன பல வகைகள், சிக்கன் மற்றும் இறந்து பல நாட்களான கோழிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து வடிக்கையாளர்களுக்கு வழங்கியது தெரிய வந்தது. இந்த சம்பவம் காட்டு தீயைப்போல பரவ செய்தியாளர்கள் மேரியோ ஜூஸி கடைக்கு விரைந்தனர். இத்தனை தொடர்ந்து ஆசாத் என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேரியோ ஜூஸி கடை புதிதாக தொடங்கப்பட்டதால் ஆசை ஆசையாக குடும்பத்துடன் சாப்பிட வந்தோம். இங்கு வந்து சிக்கன் வகைகளை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்ட போது, சிக்கனில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கடையின் சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல வகைகள் மற்றும் இறைச்சி வகைகளும் துர்நாற்றம் வீசியது மட்டுமின்றி பூசணம் பிடித்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். கெட்டுபோனதை மறைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் இனிமேல் இதுபோன்று உணவுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் பொதுமக்களை பாதிக்காத வண்ணம் இவர்கள் மீது அரசு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தகவலறிந்த தாராபுரம் காவல்துறை சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து நான்கு மணி நேரத்திற்கும் மேலாகியும் சம்பவ இடத்திற்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வராததால் பொது மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.