மேட்ரிமோனியில் வரன் பார்த்த இளைஞரின் வீட்டில் திருமணத்திற்கு முன்பு 3 நாட்கள் தங்கி 4 பவுன் நகை மற்றும் 3 லட்சம் 50 ஆயிரத்தை சுருட்டிக் கொண்டு ஓட்ட பிடித்த மீது திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று மனைவிகளை இழந்த ஆண்களை குறிவைத்து திருமணம் செய்து ஏமாற்றிய கோயம்புத்தூரை சேர்ந்த 47 வயது பெண் மடோனா என்றால் இன்று ராஜஸ்தானில் 23 வயது அனுராதா ஹேக் 7 மாதங்களில் 25 திருமணம் செய்து நகை, பணம் என கையில் கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓட்டம் பிடித்து கடைசியாக போபாலில் கான்ஸ்டபிளை 26-வது திருமணம் செய்ய முயன்றபோது கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செய்திகள் அடங்கும் முன்னே திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரியங்கா என்ற பெண் மீது புகார் கொடுத்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
திருமண தளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, அந்த தளங்களில் திருமண வரன்களைத் தேடும் நபர்களை மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் குறிவைத்து, அவர்களை தொடர்புகொண்டு, அவர்களுடன் நெருக்கமாகி அவர்களை ஏமாற்றி நகை, பணத்தை திருடும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அரங்கேறி வருகின்றது. அந்த வகையில், திருவண்ணாமலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர், செய்தியாளர்களிடம் இளைஞர் ஒருவர் பேசுகையில், நான் அண்மையில் திருமணத்திற்காக மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்தேன். அதன் மூலம் என் போன் நம்பரை எடுத்து பிரியங்கா என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.
இந்நிலையில், ஏதோ திருமண நிகழ்ச்சிக்கு செய்வதாக கூறி வீட்டில் 3 நாட்கள் தங்குவதாக கூறி வந்தார்கள்.. முதல் முறை எங்கள் வீட்டிற்கு வந்து டீ சாப்பிட்டு விட்டு போய் விட்டார்கள். இரண்டாது முறை வந்த போது என்னை பார்த்து விட்டு சென்று விட்டார். மூன்றாவது நாளில் சாப்பாட்டில் என்ன கலந்தாரோ என்று தெரியவில்லை. காலையில் எழுந்து பார்த்த போது, வீடு திறந்து கிடந்தது. அவரை காணவில்லை.. வீட்டில் இருந்த பணம், நகையை காணவில்லை.. திருமணத்திற்கு வந்ததாக கூறி வந்தவர், உறவினரை பார்ப்பதாக கூறினார். எங்கள் வீட்டில் என்னை ஏமாற்றி தங்கினார்.. அதனால் தான் அவரை தங்க அனுமதித்தோம்.. அவர் தான் பணத்தை எடுத்து இருக்கிறார்” என தெரிவித்தார்.
மேலும் நான்கு பவுன் நகையும், 3 லட்சம் 50 ஆயிரம் பணத்தையும் திருடிக் கொண்டு சென்று விட்டார். அவர் மீது புகார் அளிக்க வந்துள்ளோம். நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் எங்களை குடும்பத்துடன் காலி செய்துவிடுவோம் என்று மிரட்டினார். நாங்கள் பெரிய டீம்.. எங்களுக்கு பின்னால் வக்கீல்கள் எல்லாம் உள்ளனர். உள்ளே போய்விட்டு வெளியே வந்தாலும், குடும்பத்துடன் காலி செய்துவிடுவோம் என்று மிரட்டினார்கள் என அந்த இளைஞர் தெரிவித்தார்.