கோட் திரைப்படம் திரையிட்ட ஆல்பர்ட் தியேட்டரில் சிறுநீர் நாற்றம்! காசை திருப்பி கொடு..!

கோட் திரைப்படம் சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் இருக்கைகள் சேதமடைந்து, மூட்டை பூச்சுகளால் நிரம்பி உள்ளதாகவும், தியேட்டருக்குள்ளேயே சிறுநீர் வாடை அடிப்பதாகவும் பெண் ஒருவர் வாக்குவாதம் செய்து பணத்தை திரும்ப பெற்றார்.

கடந்த 5 -ஆம் தேதி விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் நிறைய ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்து செல்கிறார்கள். நிறைய இடங்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை எழும்பூரில் ஆல்பர்ட் தியேட்டரில் சுத்தம் இல்லை என கூறி பெண் ஒருவர் வாக்குவாதம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிம் பேசுகையில், நாங்கள் கோட் படம் பார்க்க சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டருக்கு வந்தோம். ஒரு டிக்கெட்டின் விலை ரூ 225 ஆகும். இது வரை இந்த தியேட்டருக்கு நாங்கள் வந்ததில்லை. தியேட்டர் குறித்த ரிவ்யூக்களை வைத்து டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்து உள்ளே போனோம். ஏற்கெனவே ஷோ முடித்துவிட்டு போனவர்கள் போட்ட குப்பைகளை கூட கூட்டாமல் வைத்திருக்கிறார்கள்.

சுத்தமாகவே இல்லை. தியேட்டரில் உள்ள கழிப்பறையில் சிறுநீர் வாடை அடிக்கிறது. உட்காரும் இருக்கை பிய்ந்து போய் சாய்ந்து போய் இருக்கிறது. அந்த தியேட்டரை படம் பிடித்து போடுங்கள். இந்த தியேட்டரை மறு சீரமைப்பு செய்ய மாட்டார்களா, இங்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள். எத்தனை குழந்தைகள் படம் பார்க்க வந்திருக்கிறார்கள்.

இதனால் சுகாதாரமாக இருக்க வேண்டுமா இல்லையா, சீட்டுகளில் மூட்டை பூச்சி தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் சீட்டில் உட்காரவே முடியவில்லை. இதுகுறித்து தியேட்டர் நிர்வாகிகளிடம் கேட்டால், “ஆபிஸ் ரூமுக்கு வாங்க உங்கள் பணத்தை நான் திருப்பி தரேன்” என்றார்கள். பாக்கு போட்டுக் கொண்டு முன் சீட்டில் துப்பி வைத்திருக்கிறார்கள். தியேட்டருக்குள்ளேயே சிறுநீர் வாடை வருகிறது. எல்லாரும் காசு கொடுத்துதானே படம் பார்க்கிறார்கள். இந்த தியேட்டரை புதுப்பிக்காமல் எப்படித்தான் 4 ஷோ ஓட்டுகிறார்கள் என தெரியவில்லை.

இவர்களை கன்ஸ்யூமர் கோர்ட்டிற்கு இழுக்க வேண்டும். தியேட்டருக்கு வரும் வருமானங்களை என்ன செய்கிறார்கள். வருவோர் நிம்மதியாக உட்கார்ந்து படம் பார்க்க கூட முடியாத நிலை உள்ளது. ஏசி இயங்கவே இல்லை. ஓனரை வரச்சொல்லுங்கள் என்றால், “நீங்கள் தயவு செய்து காசை வாங்கிக் கொண்டு கிளம்புங்கள்” என்கிறார்கள். இவர்கள் வசதியாக ஏசி அறையில் உட்கார்ந்திருக்கிறார்கள். மக்களை பார்த்தால் எப்படி இருக்கிறது என தெரியவில்லை என கூறி பணத்தை திரும்பவும் பெற்றுக் கொண்டு அந்த பெண் சென்றுவிட்டார்.