மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு தங்க மோதிரம் பரிசளித்த எடப்பாடி பழனிசாமி

சாலையில் தேங்கி கிடந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை, துணிந்து காப்பாற்றிய கண்ணனுக்கு அ‌திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டி, அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார். சென்னை அரும்பாக்கம், உத்தாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராபர்ட் என்பவரின் மகன் செடன் ராயனுக்கு அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அன்று சிறுவன் செடன் ராயன் பள்ளிக்கு சென்றுவிட்டு அரும்பாக்கம், மங்கள நகர் 1-வது தெரு வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். கடந்த 16 -ஆம் தேதி மழை பெய்து சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்தது. சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்றபோது, சாலையோரம் பொறுத்தப்பட்டு இருந்த மின் மீட்டர் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு மழை நீரில் நடந்து சென்ற மாணவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனால் துடித்த பள்ளி சிறுவன் அங்கேயே சுருண்டு விழுந்து உயிருக்கு போராடி உள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கண்ணன் என்ற இளைஞர் தன் உயிரை பணயம் வைத்து அந்த சிறுவனை மீட்டு முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர் உயிருக்கு போராடுவதும் இளைஞர் கண்ணன் தைரியமாகவும் தனது உயிரை பற்றி கவலையில்லாமல் துரிதமாக செயல்பட்டதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. பள்ளி சிறுவனை உயிரை காப்பாற்றிய இளைஞர் கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வந்தது.

மேலும் கண்ணன் பணியாற்றி வரும் நிறுவனத்தில் சக ஊழியர்கள் அவருக்கு கேக் வெட்டி பாராட்டு தெரிவித்தனர். மேலும் கண்ணனுக்கு இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் துணிச்சலை பாராட்டி விருது வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கௌரவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை, துணிந்து காப்பாற்றிய கண்ணனை அ‌திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டியதுடன், அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தன் உயிரை பணயம் வைத்து மின்சாரம் பாய்ந்த சிறுவனை காப்பாற்றிய இளைஞர்

மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிருக்கு போராடிய நிலையில் இளைஞர் ஒருவர் தைரியமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுவனின் உயிரை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சென்னை அரும்பாக்கத்தில் கடந்த 16 -ஆம் தேதி மழை பெய்து சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்தது. அந்த வழியாக 3 -ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தேர்வு முடித்து வீடு திரும்பி உள்ளார். அப்போது சாலையோரம் பொறுத்தப்பட்டு இருந்த மின் மீட்டர் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு மழை நீரில் நடந்து சென்ற மாணவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனால் துடித்த பள்ளி சிறுவன் அங்கேயே சுருண்டு விழுந்து உயிருக்கு போராடி உள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கண்ணன் என்ற இளைஞர் தன் உயிரை பணயம் வைத்து அந்த சிறுவனை மீட்டு முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர் உயிருக்கு போராடுவதும் இளைஞர் கண்ணன் தைரியமாகவும் தனது உயிரை பற்றி கவலையில்லாமல் துரிதமாக செயல்பட்டதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. பள்ளி சிறுவனை உயிரை காப்பாற்றிய இளைஞர் கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.