K. Balakrishnan: துணை ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எங்களது கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி ரிப்பன் மாளிகை அருகே எனது தலைமையில் போராட்டத்துக்கு திட்டமிடப்பட்டது.

சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள விக்டோரியா கட்டிட நுழைவுவாயில் அருகில் ஆர்ப்பாட்டத்துக்காக கட்சியினர் கூடினர். காலை சுமார் 11 மணி அளவில் அப்பகுதிக்கு நானும் கட்சியின் முக்கியத் தலைவர்களும் சென்றோம்.

அப்போது கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ரகுபதி அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பதிலாக 50 மீட்டர் தள்ளி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தெரிவித்தார். துணை ஆணையர் ரகுபதி கூறியபடி, கட்சியினர் 50 மீட்டர் தள்ளிச் சென்றனர். ஆனால், துணை ஆணையர் மேலும் உட்புற சந்தில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துமாறு வலியுறுத்தியதுடன் காவல்துறையினர் மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பெண்கள் உள்ளிட்டவர்களை பிடித்துத் தள்ளிவிட்டார். இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, எங்களை ஒருமையில் பேசியும், கையால் தள்ளியும், அடாவடித்தனமாகச் செய்தனர்.

இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது `கைது செய்ய வேண்டிவரும்’ என மிரட்டும் வகையில் சத்தமிட்டார். கடைசி வரையில் காவல் துறையினரை வைத்து சூழ்ந்துகொண்டு ஆர்ப்பாட்டம் சரியாக நடத்துவதற்கே அவர் அனுமதிக்கவில்லை. இருப்பினும் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு கிளம்பிய என்னைக் கைது செய்வதாகக் கூறி, வாகனத்தில் ஏற்றிச் சென்றார்.

இந்த போக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துள்ளது. எனவே, கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ரகுபதி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் தெரிவிக்கப்படுள்ளது.

பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்: கிருஷ்ணகிரியில் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி வேண்டும்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தால், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். தனியார் பள்ளிகளில், சம்பந்தம் இல்லாத அமைப்புகள் பயிற்சி அளிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகஅரசு அமைத்துள்ள சிறப்புக் குழு, தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 314 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து முதல்வரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். சட்டவிரோத குவாரிகளை மூடி,இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அரசியல் தொடர்பு இல்லாமல் இதுபோன்ற குற்றங்கள் நடக்காது. வனவிலங்கு சரணாலயம் அமைத்துள்ளதாகக் கூறி, அப்பகுதியைச் சுற்றியுள்ள 164 கிராம மக்களுக்கு வனத் துறையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர் என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாலகிருஷ்ணன்: வனவிலங்கு சரணாலயம் அமைப்பதாக கூறி, கிராம மக்களுக்கு வனத் துறையினர் தொல்லை..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தால், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். தனியார் பள்ளிகளில், சம்பந்தம் இல்லாத அமைப்புகள் பயிற்சி அளிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அமைத்துள்ள சிறப்புக் குழு, தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 314 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து முதல்வரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். சட்டவிரோத குவாரிகளை மூடி,இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அரசியல் தொடர்பு இல்லாமல் இதுபோன்ற குற்றங்கள் நடக்காது. வனவிலங்கு சரணாலயம் அமைத்துள்ளதாகக் கூறி, அப்பகுதியைச் சுற்றியுள்ள 164 கிராம மக்களுக்கு வனத் துறையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர் என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொந்தளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…! தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு டிஜிபியாக பதவி உயர்வா…!?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 மே 22-ம் தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

வன்முறை நடக்கக்கூடும் என்று முன்கூட்டியே தெரிந்தும் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அப்போதைய தென் மண்டல ஐஜி ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில் குமார் சி.சரத்கர், தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன் உட்பட காவல் துறையை சேர்ந்த 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது.

இதையடுத்து, காவலர்கள் உள்ளிட்ட சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது, சைலேஷ் குமார் யாதவுக்கு பணி மூப்பு அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு, கூடுதல் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ், டிஜிபியாக பதவி உயர்த்தப்படுகிறார். அதே பதவியில் டிஜிபியாக அவர் பணியைத் தொடர்வார் என தமிழக அரசின் உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட அப்போதைய ஐஜி சைலேஷ் குமாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இதுகுறித்து, சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும், அன்றைய தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவுக்கு பணி மூப்பு அடிப்படையில் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இதனை மறு பரிசீலனை செய்வதோடு, சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விரைந்து தண்டிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை 2022 அக்டோபர் மாதம் வெளியானது.

இந்த அறிக்கை பல்வேறு குற்றங்களை வெளிக்கொண்டு வந்தது. அன்றைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரா இருந்த கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

ஆனால், இந்நிலையில் அன்றைய தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் இப்போது டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளது பணி மூப்பு அடிப்படையில் என்றாலும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், தற்போது சைலேஷ் குமார் யாதவ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டிஜிபி பதவி உயர்வினை மறுபரிசீலனை செய்து ரத்து செய்திட வேண்டுமெனவும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தயங்குவது உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு தூண்டுகோளாக அமைந்து விடும் என்பதை கட்சி சுட்டிக்காட்டவிரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.