மார்க்சிஸ்ட் கட்சி தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார், பா.ஜான்சி ராணி, வெ.ராஜசேகரன், இ.முத்துக்குமார் முன்னிலையில் மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கையை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.
மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கையில்,
1. மாநில அரசின் ஆலோசனை பெற்று ஆளுநரை நியமிக்க வேண்டும்.
2. மாநில பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராக ஆளுநருக்கு பதில் முதலமைச்சரை நியமனம் செய்ய வேண்டும்.
3. வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்குவதோடு, வேலை கிடைக்கும் வரை நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
4. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதோடு, கல்விக்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
5. வேளாண் தொழிலையும், விவசாயிகளையும் பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.
6. கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் துறைகளை தனியார்மயமாக்குவதை கை விட வேண்டும்.
போன்ற சிறப்பு அம்சங்களுடன் மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கையில் அடங்கியுள்ளது.