மாநகராட்சி ஆணையர் அதிரடி: கால்வாய்களில் குப்பை கொட்டியவர்களுக்கு 2 லட்சம் அபராதம்

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் நான்காவது மண்டலம் கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், ஜவகர் கால்வாய் மற்றும் இணைப்பு கால்வாய் ஆகிய கால்வாய்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனைத்தொடர்ந்து கால்வாய்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் படி, மாநகராட்சி ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து வடக்கு வட்டார துணை ஆணையர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழு நான்காவது மண்டல அலுவலர் தலைமையில் நேற்று கால்வாய்களை ஒட்டியுள்ள பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டது.

சோதனையில் கால்வாய்களில் குப்பை கொட்டிய வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுனங்கள் ஆகியவற்றிற்கு ரூ.2,05,000 அபராதம் விதிக்கப்பட்டது. கால்வாய்களில் குப்பைகளை கொட்டி நீர்நிலைகளின் ஒட்டத்திற்கு தடை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அதிரடி..!பேரிடர் நிவாரண பணியில் ட்ரோன்களை களமிறக்க முடிவு..!

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் நவீன தொழில் வளர்ச்சியின் விளக்காக புதுப்புது யுத்திகளை கையாண்டு மக்கள் பணியாற்றி வருகின்றது. அதாவது தற்போது பல்வேறு துறைகளில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. திருமண விழாக்கள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்களை படம்பிடிக்க பயன்படுத்தப்பட்டு வந்த ட்ரோன்கள் இன்று ராணுவம், வேளாண்மை, உள்ளாட்சி அமைப்பு மருத்துவம், திரைத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றன. வரும் காலங்களில் ட்ரோன் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ட்ரோன் தொழில்நுட்பத்தின் கேந்திரமாக சென்னையை மாற்றுவதற்கான பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சியின் பல்வேறு சேவைகளை கண்காணிக்கவும், மாநகராட்சியின் சேவைகளை மேம்படுத்தவும் ட்ரோன்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இதனை தனது எக்ஸ் பக்கத்தில், கடற்கரை கண்காணிப்பு, கால்வாய்களை தூர்வாருதலை கண்காணித்தல், நிவாரணப்பணிகள், பேரிடர் காலங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மருந்துகளை கொண்டு செல்லுதல், மனிதர்களால் செல்ல முடியாத பகுதிகள் குறித்த வரைபடங்களை உருவாக்குவது, குப்பை கொட்டும் இடங்களை கனண்காணிப்பது போன்ற பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார். இதற்காக டரோன் இயக்குவோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்த குமரகுருபரன் அதற்காக டெண்டர் கோரப்பட்ட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.