நாமக்கலில் கர்நாடகா காவல்துறையிடம் நடுரோட்டில் மல்லுக்கட்டு பெண் ..!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் திருட்டு வழக்கில் கணவரை கைது செய்யவிடாமல் தடுத்து மனைவி வாக்குவாதம் செய்செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் உள்ள திருட்டு வழக்கில் தொடர்புடையதாக கூறி காவல்துறை அழைத்து செல்ல முயல அதற்கு மறுப்பு தெரிவித்து மனைவி போராடினார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலத்தில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடையதாக கூறி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே வசித்து வந்த இளைஞரை கர்நாடகா மாநில காவல்துறை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த அவரது மனைவி, தன்னுடைய கணவர் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்று கூறி, கர்நாடகா காவல்துறையினரிடம் மல்லுக்கட்டினார். இந்த சம்பவத்தால் பள்ளிப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டி, கர்நாடகா எல்லைப் பகுதியிலுள்ள கேஎன் போடூர் பகுதியைச் சேர்ந்த நாகபுஷ்பம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த யுவராணி என்ற பெண்ணை பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் கடந்த நான்கு வருடம் முன்பு காதல் திருமணம் செய்தார். இந்த தம்பதி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த எஸ்எஸ்பி காலணி பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் அந்த பகுதியில் கூலி வேலைக்கு சென்று வாழ்ந்து வருகிறார்கள்.

நேற்று கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே உள்ள புதுக்கோட் காவல்துறை, இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக நாகபுஷ்பத்தின் செல்போனை தொடர்பு கொண்ட காவல்துறை, பின்னர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்திற்கு வந்தனர். அப்போது நாகபுஷ்பத்தை கர்நாடகா காவல்துறை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவரது மனைவி யுவராணி, அங்கு உடனடியாக சென்று, தடுத்து நிறுத்தினார். எனது கணவர் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. அழைத்து செல்ல விடமாட்டேன் என்று கூறி நடுரோட்டில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய பெண், எனது மாமனாரிடம் காசு வாங்கி கொண்டு எங்களை தனித்தனியாக பிரிக்க பார்க்கிறார்கள்.. அதுக்கு தான் இவர்கள் எல்லாருமே பிளான் செய்கிறார்கள். இவர் மீது எந்த வழக்கும் இல்லை. ஆனால் கேஸ் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாமே பொய் கேஸ் ” என தெரிவித்தார். இதனால் பள்ளிப்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.