மருத்துவர் வடிவில் ஒரு மிருகம்…! வயதான தூய்மை பணியாளரை காலால் எட்டி உதைத்து மருத்துவர்…!

நாமக்கல் கோட்டை சாலையில் கண்ணகி மருத்துவமனை (குமரன் பாலி கிளினிக்) என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ராஜ்குமார் என்பவர் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் தூய்மைப் பணியாளரை அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் பெண் தூய்மைப் பணியாளரை மருத்துவர் ராஜ்குமார் அடித்து, காலால் எட்டி உதைத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி நாமக்கல்லில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.