மருத்துவரை தாக்கிய விக்னேஷின் தயார் காவல் நிலையத்தில் புகார்..!

அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில், ‘‘எங்கள் தரப்பு பாதிப்புகளைப் பற்றி பேச யாருமே இல்லையே’’ என விக்னேஷ் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி என்பவர் நேற்று முன்தினம் காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் விக்னேஷின் தாயார் பிரேமாவுக்கு, மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் விக்னேஷ், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூரில் வசிக்கும் பிரேமாவின் சகோதரி தேவி உள்ளிட்ட உறவினர்கள் நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ‘‘மருத்துவரை விக்னேஷ் கத்தியால் குத்தியது பற்றி முன்னரே எங்களுக்கு எதுவும் தெரியாது. அது பற்றி அவன் எங்களிடம் எதுவும் பேசவில்லை. அவன் இப்படி செய்யப் போகிறான் என்று தெரிந்திருந்தால் நாங்கள் அவனைத் தடுத்திருப்போம். அவன் செய்த செயல் ஏற்புடையது அல்ல.

அதே நேரத்தில் அந்த மருத்துவரின் சிகிச்சை முறையால் எங்கள் வீட்டிலும் ஒரு உயிர் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி பேச இங்கு யாருமே இல்லையே. மேலும், வீட்டில் இருந்த மருத்துவ ஆவணங்களையெல்லாம் காவல்துறையினர் எடுத்துச் சென்றுவிட்டனர். மருத்துவ அறிக்கைகள் இல்லாமல் அவருக்கு எப்படி மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியும்’’ என கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷை சக மருத்துவர்கள், பணியாளர்கள் சுற்றிவளைத்து சிலர் காலால் எட்டியும் உதைத்து தாக்கினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், விக்னேஷின் தாய் பிரேமா கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்து அனுப்பினார்.

அந்த புகார் மனுவில், ‘என் மகன் விக்னேஷ் இதய நோயாளி. அவரை மருத்துவர்கள் உட்பட பலர் சுற்றி வளைத்து தாக்கினர். எனவே, மகன் பலத்த காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிறையில் உரிய சிகிச்சை கொடுக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்..! நோயாளிகள் பெரிதும் பாதிப்பு..!

புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக மருத்துவர் பாலாஜிமீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனை முன்பாக மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ 230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தரை தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 1000 படுக்கை வசதிகள் கொண்டு இதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்துறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டதில் இருந்தே புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக மருத்துவர் பாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியிலுள்ள காமராஜர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த விக்னேஷின் தந்தை 3 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். தாய் மற்றும் 2 சகோதரருடன் விக்னேஷ் வசித்து வருகிறார். இவரது தாய் உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளது. முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயின் சிகிக்சைக்கு பணம் தடையாக இருந்ததால் தாயை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்திலுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்தவமனையில் சேர்த்துள்ளார். இங்கு விக்னேஷின் தாயாருக்கு 6 முறை கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தாயாரை விக்னேஷ் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதற்கிடையே தான் தாயாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மீண்டும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் உன்னுடைய தாயாருக்கு முதலில் சரியாக வழங்கப்படவில்லை. அதனால், தற்போதைய உடல்நல பிரச்சனைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சிகிச்சை சரியாக கொடுக்காதது தான் காரணம் என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த விக்னேஷ் சுமார் 10 மணி அளவில் புறநோயாளிகள் பிரிவில் ஓ.பி. சீட்டு வாங்கிக் கொண்டு, புற்றுநோய் மருத்துவ நிபுணர் பாலாஜியின் அறைக்குச் சென்றார்.

பின்னர் விக்னேஷ் அறையின் கதவை மூடிவிட்டு, “எதற்காக எனது தாயாருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவில்லை” எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த வீட்டில் காய்கறிகள் வெட்டும் கத்தி எடுத்து மருத்துவர் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

மருத்துவர் பாலாஜி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதன்பின்னர் அங்கிருந்த பணியாளர்கள், பொதுமக்கள் அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்துவந்த கிண்டி போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீஸார் விக்னேஷை கைது செய்து, அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் கிண்டி மருத்துவமனையில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்படிருந்தது. அதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக்குத்து..!

“சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு நான்கு பேர் சிகிச்சைக்காக இன்று வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நான்கு பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பார்கள் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி பணியில் இருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு வந்த சிலர் மருத்துவர் பாலாஜியிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தியதில் ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிண்டி காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மருத்துவர் பாலாஜியை தாக்கிய நபர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் அரசு மருத்துவமனையில் மயங்கி கிடந்த மருத்துவர்..!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சைபெற்று வருகிறார்கள். 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. பணிக்கு வந்த அந்த மருத்துவர் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.

மேலும் அவர் மதுபோதை மயக்கத்தில் மருத்துவமனை வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். இதனை கண்டு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனை உள்ளே செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் போதை மயக்கத்தில் இருந்த அந்த மருத்துவர் மருத்துவமனைக்குள் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த ஊழியர்கள், போதை மருத்துவரை காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த மருத்துவர் புறப்பட்டு சென்று உள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மண்ணீரலுக்கு பதிலாக கல்லீரலை அகற்றிய மருத்துவர்..! தவறான அறுவை சிகிச்சையால் உயிரிழப்பு..!

அமெரிக்கா வாஷிங்டனில் 70 வயதான வில்லியம் பிரையன் மற்றும் அவரது மனைவி பெவர்லி ஆகியோர் கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள ஒகலூசா கவுண்டியில் உள்ள தங்களுடைய வாடகை வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவருக்கு திடீரென கீழ் இடது வயிற்று வலி ஏற்பட்டது. வில்லியம் பிரையன் தசை ஷோல்ஸ், AL குடியிருப்பாளர் வால்டன் கவுண்டியில் உள்ள அசென்ஷன் சேக்ரட் ஹார்ட் எமரால்டு கோஸ்ட் மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு அவர் மண்ணீரல் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தாமஸ் ஷக்னோவ்ஸ்கி மற்றும் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கிறிஸ்டோபர் பகானி ஆகியோர் தயக்கம் காட்டிய குடும்பத்தினரை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.

பிரையன் மருத்துவர்களுக்கு கட்டுப்பட்டு ஆகஸ்ட் 21 அன்று லேப்ராஸ்கோபிக் ஸ்ப்ளெனெக்டோமி செயல்முறையை மேற்கொண்டார். அறுவை சிகிச்சையின் நடுவில், ஷக்னோவ்ஸ்கி கல்லீரலை வழங்கும் பெரிய வாஸ்குலேச்சரைக் கடந்து பிரையனின் கல்லீரலை அகற்றினார். மண்ணீரலுக்கு பதிலாக கல்லீரலை அகற்றியதால் ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரையன் பரிதாபமாக உயிரிழந்து வில்லியம் பிரையன் குடுப்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.