முப்பெரும் விழா மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன் பரிசுகள் வழங்கல்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், SV புரம் ஜீவா திடலில் ஜீவா நற்பணி மன்றம் சார்பில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின விழா, சமத்துவ பொங்கல் விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கடந்த ஞாயிறு கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

இந்த முப்பெரும் விழாவிற்கு ஜீவா நற்பணி மன்ற தலைவர் குணா செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்.கிட்டு என்கின்ற கிருஷ்ணசாமி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணக்கம்பாளையம் தேசியக் கொடி ஏற்றினார். சமத்துவ பொங்கல் விழாவை கணக்கம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா என்கின்ற காமாட்சி அய்யாவு அவர்கள் துவக்கி வைக்க மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன் MA அவர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த முப்பெரும் விழாவில் நகர மன்ற தலைவர் மு.மத்தின் மற்றும் ப. சண்முக வடிவேல் வருவாய் கோட்டாட்சியர் உசிலம்பட்டி மதுரை மாவட்டம் விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்தார். மடத்துக்குளம் தொழில் அதிபர் கே.டி.எல் அரிமா அப்பாஸ், பால் நாராயணன், கா.அப்பாஸ் அவர்கள், தெய்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சந்திரமௌலி காவல்துறை உதவி ஆய்வாளர் ராமேஸ்வரன் சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினர். மேலும் இந்த முப்பெரும் விழாவில் பொதுமக்களும் மற்றும் குழந்தைகளும் விளையாட்டு போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

குழந்தைகளை தண்ணீர் குடிக்கவோ, கழிவறை செல்லவோ அனுமதிக்காமல் தண்டனை கொடுக்கும் தலைமை ஆசிரியை..!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தை அடுத்த துங்காவி ஊராட்சி உடையார்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கழுகரை பகுதியைச் சேர்ந்த கலையரசி என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட பெற்றோர் குழந்தைகளை வகுப்புக்கு அனுப்பாமல் பள்ளி வளாகத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘தலைமை ஆசிரியை கலையரசி பள்ளிக் குழந்தைகளை மிகவும் மோசமாக நடத்துகிறார்.

நீங்களெல்லாம் சிறைக்கைதிகள், நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று குழந்தைகளை மிரட்டுவதுடன் அடித்து துன்புறுத்தியுள்ளார். குழந்தைகளை தண்ணீர் குடிக்கவோ, கழிவறை செல்லவோ அனுமதிக்காமல் நூதன முறையில் தண்டனை கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை நீண்ட நேரம் கழிவறை செல்ல அனுமதிக்காததால் வயிற்று வலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சையளித்துள்ளனர்.

மேலும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது, ஆபத்தான முறையில் குடிநீர்த் தொட்டி மீது ஏறி தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டால் அவர்களிடமும் மரியாதையில்லாமல் பேசுகிறார். போன்ற தலைமை ஆசிரியை மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்த பெற்றோர், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்து பள்ளி வளாகத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.