கடலூா் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் துணை சாா் பதிவாளராக சங்கீதா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் தொடர்ந்து லஞ்சம் பெறுவதாகவும், அதனை ‘ஜி-பே’, ‘போன்-பே’ மூலமாகவும், நேரடியாகவும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறைக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் ஆய்வாளர்கள் சுந்தரராஜன், திருவேங்கடம், ஆய்வுக்குழு தலைவர் முருகன் மற்றும் காவல்துறையினர் நேற்று மாலை 5.30 மணிக்கு விருத்தாசலம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இரவு 8.30 மணி வரை அலுவலகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியத்தில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 50 லட்சம் இருந்தது கண்டுபிடித்தனர். மேலும் விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர் உதயகுமாரையும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.