13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வழக்கில் தலைமறைவாகிய மூன்று பேரை தனிப்படை கைது..!

திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டதில் நடந்த இச்சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 17-ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே உள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் 13 வயது சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மகளை தேடி சிறுமியின் தந்தை சென்றுள்ளார்.

அப்போது கல்குவாரி அருகே மகளின் அலறல் சத்தம் கேட்க அந்த இடத்தை நோக்கி சிறுமியின் தந்தை சத்தமிட்டபடி ஓடியுள்ளார். இதனை அறிந்த அந்த மர்ம ஆசாமிகள், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களை பிடிக்க முடியாமல் திரும்பி வந்து மகளை பார்த்தபோது மகளின் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளார். இந்த சம்பவம் இது வெளியே தெரிந்தால் தனது குடும்பத்துக்கு அவமானம் என நினைத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் உறவினர் வீட்டுக்கு தனது மகளை அனுப்பி வைத்துள்ளார்.

உறவினர் வீட்டில் சிறுமிக்கு உடல்நிலை சரியாகாமல் இருந்ததால் உறவினர்கள் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் சம்பவம் வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி நடந்துள்ளது ஆகையால் நீங்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

ஆனால் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது அவர்கள் பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு திரும்ப அனுப்பியுள்ளனர். இப்படி பள்ளிகொண்டா காவல் நிலையமும் வேப்பங்குப்பம் காவல் நிலையம் மாறி மாறி அலைக்கழித்து உள்ளனர்.

செய்வதறியாது சிறுமின் உறவினர்கள் இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனுக்கு தகவல் தெரிந்த பின் அவர் உத்தரவின் பேரில் சிறுமியின் தந்தை வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வேலூர் அனைத்து மகளிர் காவல்துறை தேடுவதை தொடர்ந்து குற்றவாளிகள் தலைமறைவு ஆகினர்.

இதன் தொடர்ச்சியாக, துணைக் காவல் கண்காணிப்பாளர் சாரதி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் சித்தூர் பகுதியில் பதுங்கி இருப்பது தனிப்படைக்கு தகவல் கிடைக்க சித்தூர் விரைந்த தனிப்படை சின்ராஜ், வீரப்பன், இளமதன் ஆகிய மூன்று பேரை கைது செய்து வேலூர் அனைத்து மகளிர் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து, ஆய்வாளர் காஞ்சனா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேரையும் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.