அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25 பேரின் பணத்தை ஏப்பம் விட்ட பெண் கைது..!

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஹெல்பர், லேப் டெக்னீசியன், நர்ஸ், வரவேற்பாளர் உள்ளிட்ட அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25 பேரின் பணத்தை ஏப்பம் விட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரை தெரியும், அந்த அதிகாரியை தெரியும்.. அவர் என் மச்சான்.. அவர் என் மாமா.. என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று பலர் லட்சக்கணக்கில் ஏமாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட மீஞ்சூர், புங்கம்பேடு, பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு தனது உறவினர் மூலம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக வேலை செய்து வருவதாக கூறி ஜோதி என்ற பெண் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிதாக ஹெல்பர், லேப் டெக்னீசியன், நர்ஸ், வரவேற்பாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான காலி பணியிடங்கள் இருப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய சதீஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்கள் என சுமார் 25 நபர்களிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பல தவணைகளாக மொத்தம் ரூ.10 லட்சம் வரை திரட்டி ஜோதியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட ஜோதி யாருக்கும் வேலை வாங்கி தராமல் சதீஷ்குமாரை பணமோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் சதீஷ்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மோசடியில் ஈடுபட்ட மீஞ்சூர் வ.உ.சி தெருவை சேர்ந்த ஜோதி என்ற மாதுரி என்பவரை காவல்துறை கைது செய்தது.

சில்லறை சண்டையில் பெண்ணிடம் சில்லறை தனமாக நடந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் கைது..!

சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமில்லை என்று வடமாநிலப் பெண் வீடியோ ஆதாரங்களுடன் முகநூலில் பதிவிட்டதையடுத்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர். வடமாநிலப் பெண் ஒருவர் சென்னையில், கோட்டூர்புரத்தில் படிப்பதற்காக வந்துள்ளார். கோட்டூர்புரத்தில் இருந்து திருவான்மியூர் கடற்கரைக்குச் செல்வதற்காக ரேபிடோ ஆட்டோவை புக் செய்துள்ளார். 163 ரூபாய் ரேபிடோ கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், அப்பெண்ணிடமும், ஆட்டோ ஓட்டுநரிடமும் சில்லறை இல்லாமல் இருந்துள்ளது. அந்தப் பெண் 200 ரூபாய் கொடுத்து சில்லறை கேட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநருக்கும், வடமாநிலப் பெண்ணுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதில், அப்பெண்ணுக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை அந்த வடமாநிலப் பெண் முகநூலில் பதிவேற்றம் செய்து, சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இல்லை என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆட்டோ ஓட்டுநர் ஐ வாண்ட் மை மணி என்று கூறுகிறார். அதற்கு அந்தப் பெண் ஐ டோன்ட் ஹேவ் சேஞ்ச் என்று கூறி சில்லறை கேட்கிறார். சில்லறை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஸ்டுபிட், டோன்ட் ஷவுட் என்று கூறி அந்தப் பணத்தை அவர் மீது அப்பெண் தூக்கியெறிகிறார்.

இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் எச்சில் துப்பியும், ஆபாசமான வார்த்தைகளாலும் அப்பெண்ணை தாக்க முற்படுகிறார். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் ஆண் நண்பர் இமெயில் மூலமாக அடையாறு சைபர் கிரைம் காவல்துறைக்கு வீடியோ ஆதாரத்தோடு புகார் அளித்துள்ளார். இதையடுத்து, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த ரேபிடோ ஆட்டோ ஓட்டுநரான பால்பாண்டியை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெண் உதவி ஆய்வாளர் பிரணிதா காவல் நிலையத்துக்குள் தாக்கியதாக விசிக நிர்வாகி மீது புகார்..!

காரைக்குடி அருகே காவல் நிலையத்துக்குள் காவல் உதவி ஆய்வாளர் பிரணிதா தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. காயமடைந்த உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பிரணிதா. பிரணிதா நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, புகார் மனு தொடர்பான தகவலுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி உள்ளிட்டோர் சென்றனர். அப்போது, அவர்களுக்கும், பிரணிதாவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, காவல் நிலையத்தில் சீருடையில் இருந்த தன்னை விசிக மாவட்ட நிர்வாகி தாக்கியதில் காயமடைந்ததாக பிரணிதா புகார் தெரிவித்தார். அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உதவி ஆய்வாளரை தாங்கள் தாக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் சோமநாதபுரம் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

முன்னாள் கணவரையும், உறவுக்கார பெண்ணையும் சரமாரியாக புரட்டி எடுத்த பெண்..!

முன்னாள் கணவரையும், அவருடன் ஆட்டோவில் வந்த உறவுக்கார பெண்ணையும் சரமாரியாக நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்த பெண். ஜீவனாம்சம் கோரி, விவாகரத்தான மனைவி வழக்கு தொடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.. எனினும், யாருமே எதிர்பாராதவகையில், திருவள்ளூர் கோர்ட்டில் இப்படியொரு சம்பவம் நடந்து, பரபரப்பை தந்துவிட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்த சத்யாவிற்கு ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பகுதியை சேர்ந்த உறவுக்காரரான முனீந்திராவுக்கும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் முனீந்திரா, தொழில் செய்வதற்கு மனைவி சத்யா பெயரில் வங்கியில் 10 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் தன்னிடமிருந்த 40 சவரன் நகையை அடகுவைத்து கணவருக்கு ஆந்திராவில் கோழி பண்ணை வைத்து கொடுத்துள்ளார்.

ஆனால், முனீந்திராவுக்கு, திடீரென வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் சத்யாவுக்கு தெரிந்து கொந்தளித்து போய்விட்டார். இது தொடர்பாக கணவரிடம் கேள்வி எழுப்பியதையடுத்து, தம்பதிக்குள் தகராறு வெடித்தது. இறுதியில், சத்யாவை விவாகரத்து செய்ய முடிவு முனீந்திரா செய்தார். இதற்காக ஆந்திர மாநில நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்து, அந்த விவாகரத்து வழக்கில் வெற்றி பெற்றதால் சத்யாவையும் வீட்டைவிட்டு வெளியேற்றினார்.

ஆனால், விவாகரத்து வழக்கில் சத்யாவுக்கு ஜீவனாம்சம் எதுவும் கொடுக்காததால் சத்யா திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சத்யா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக நேற்றைய தினமும், சத்யாவும், முனீந்திராவும் ஆஜராகி இருவருமே வாய்தாவையும் முடித்துவிட்டு கிளம்பினார்கள். இதில், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் ஆட்டோவில் உறவுக்கார பெண்ணுடன் முனீந்திரா வந்து கொண்டு இடருந்தார்.

அப்போது ஆட்டோவை மடக்கிய சத்யா, முனீந்திராவை அடித்து உதைத்தார். தடுக்க வந்த உறவுக்கார பெண்ணுக்கும் சரமாரி உதை விழுந்தது. இதனால் பயந்து போன அநத பெண், ஆட்டோவின் மறுபக்கத்தில் எகிறி குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால், அவர் கீழேவிழுந்து படுகாயம் அடைந்துவிட்டார். எனினும், முனீந்திராவை சத்யா விடவேயில்லை, நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்தார். இதனால் ரோட்டில் சென்ற அனைவருமே இதை நின்றுகொண்டு வேடிக்க பார்க்க துவங்கிவிட்டனர்.

பிறகு, சத்யாவுடன் வந்த வழக்கறிஞர்கள், ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட சத்யாவை தடுத்து நிறுத்தினார்கள். முனீந்திரா, சத்யா இருவரையுமே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார்கள். அப்போது, முனீந்திராவுக்கு தமிழ் தெரியாதாம், திருவள்ளூர் வழக்கு நடப்பால், தமிழ் பேசத்தெரிந்த உறவுக்கார பெண்ணை முனீந்திரா அழைத்து வந்தாராம். ஆனால், இன்னொரு பெண்ணுடன் சுசீந்திராவுக்கு தொடர்பு இருப்பதாக நினைத்துக்கொண்டு, இருவரையுமே சத்யா தாக்கினாராம்.

சீமான் கேள்வி: எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி..! பெண்ணிய உரிமையா..!?

பெண்ணிய உரிமையா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இரு என சொன்னது பெண்ணிய உரிமையா? என சீமான் கேள்வியெழுப்பினார். கடலூர் மாவட்டத்தில் நாதக கலந்தாய்வுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசினார். அப்போது, ‘விஜயை முதலில் நேசித்த நீங்கள் தற்போது ஏன் அவருடன் முரண்பாடு’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சீமான், “அண்ணன் தம்பி பாசம் என்பது வேறு, கொள்கை கோட்பாடு முரண் என்பது வேறு. அவர் பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் அவர் கொள்கை வழிகாட்டி எனும் கேள்வி கேட்க வேண்டியது இருக்கிறது. உலகில் மொழியில் இருந்து தான் அனைத்தும் பிறக்கிறது. அந்த மொழியையே சனியன், குப்பை, காட்டுமிராண்டி மொழி, உங்க தமிழ்த்தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது, 3000 ஆண்டுகளாக உங்களைப் படிக்க வைத்தாளா என்று கேட்டால், திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் உள்ளிட்டவற்றை எழுதியவர்களை எல்லாம் எங்கள் தமிழ்த்தாய் படிக்கவைக்கவில்லையா.

தமிழை சனியன் என்று சொன்ன பெரியார் எந்த மொழியில் எழுதினார். என் மொழியை ஒன்றுமில்லை என்று சொல்லும்போது, பிறகு என்ன சமூக மாற்றம், சீர்திருத்தம், அரசியல் இருக்கிறது. ஆகச் சிறந்த உலக வாழ்வியல் நெறி திருக்குறளை மலம் என்று சொல்லிவிட்டீர்கள். அவரைக் கொண்டு வந்து கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி. பெண்ணிய உரிமையா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இரு என சொன்னது பெண்ணிய உரிமையா?

மேலும், தன் தோட்டத்திலிருந்த 1000 தென்னை மரங்களை வெட்டினார். அவர் பகுத்தறிவாளர் தானே, என் தோட்டத்தில் கள்ளு இறக்க அனுமதி இல்லை என்று சொல்லி இருந்தால் போதுமே எதற்கு மரங்களை வெட்ட வேண்டும். இது பகுத்தறிவா? உலகில் எந்த நாட்டில் மது இல்லை. அனைவரும் மது அருந்துகிறார்கள். மது குடிக்க வேண்டாம் என்பது, கட்டிய மனைவியுடன் படுக்க வேண்டாம் என்று சொல்வதற்கு சமம் என்று சொல்லியிருக்கிறாரா? இல்லையா? அப்போ இந்த இடத்தில் ஏற்கிறீர்களா?

சமூகநீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கிறதா அல்லது இடஒதுக்கீட்டிற்கும் ஆனைமுத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா? போராடி பெற்றுக்கொடுத்தது ஆனைமுத்தா, பெரியாரா? என பெரியார் குறித்து சரமாரியாக குற்றம் சாட்டினார்.

40 பவுன் ஆட்டைய போட்ட பெண் யோகா மாஸ்டர் கைது..!

சென்னை வடபழனி, ஏவிஎம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து சங்கர் வளசரவாக்கத்தில் சொந்தமாக ஐ.டி நிறுவனம் நடத்தி வருகிறார். சங்கர் கடந்த மாதம் 3-ஆம் தேதி பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மயமானதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், புகார் குறித்து விசாரிக்க, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், அவரது நண்பர் எண்ணுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக அனுப்ப கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி, சங்கர் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டும், உரிய விசாரணை நடத்தாமல் புகார்தாரரை, உதவி ஆய்வாளர் அநாகரிகமாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

அதன்படி, வடபழனி காவல் சரக உதவி ஆணையர் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், புகாருக்கு உள்ளான உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோ பகுதியை சேர்ந்த யோகா மாஸ்டர் காயத்ரி, கடந்த 2 மாதமாக யோகா கற்றுக் கொடுக்க சங்கர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். கடந்த மாதம் சங்கர் வீட்டுக்கு வந்தபோது, நகை இருந்த அறை திறந்து கிடந்துள்ளது.

அதைப் பார்த்த காயத்ரி, பீரோவில் இருந்து 40 பவுன் நகைகளை எடுத்துள்ளார். அதில் ஒரு பகுதியை விருகம்பாக்கத்தில் உள்ள பிரபலமான நகைக்கடை ஒன்றில் விற்று ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் வைர செயின் வாங்கியது காவல்துறை விசாரணையில் தெரியவர யோகா மாஸ்டர் காயத்ரி கைது செய்தனர்.