திண்டுக்கல் சீனிவாசன்: பாஜக உடன் கூட்டணி..! நாக்கை வழிப்பதா..!?

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை கல்வித் துறையுடன் இணைத்து முடக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்து மதுரை, திண்டுக்கல் தேனி மாவட்ட அதிமுக சார்பில் மதுரை அருகே செக்கானூரணி பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘அதிமுக ஆட்சியில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வந்தன.

இந்த பள்ளிகளை முடக்கும் வகையில், திமுக அரசு, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் முயற்சிகளை எடுத்தது. அதை எதிர்த்து பொதுச்செயலாளர் கே.பழனிசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டு அதிமுக உண்ணாவிரதத்தை அறிவித்தார். அதிமுகவின் இந்த அறிவிப்பால் தற்போது திமுக அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை முடக்க நினைத்த நடவடிக்கையில் பின்வாங்கியுள்ளது’’ என்றார்.

மேலும், பிரமலைக்கள்ளர்கள் ளை விட்டுவிடாதே என ஸ்டாலினுக்கு அவரது தந்தை கூறியிருப்பார் போல, இன்று பிரமலைக்கள்ளர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க அவர் முயற்சிக்கிறார். பாஜக உடன் கூட்டணி அமைத்து MP-க்களை பெற்று நாக்கை வழிப்பதா? என திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.