வெள்ளாளன்விளை ஆலய பிரதிஷ்டை விழாவிற்கு வந்த ஆம்னி வேன் கிணற்றுக்குள் பாய்ந்து குழந்தை உட்பட 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டம் சங்கிலியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோசஸ் இவரது மனைவி வசந்தா, மகன் கெர்சோம், இவரது மனைவி சைனி கிருபா, ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின், உறவினர்கள் ரவி கோயில் பிச்சை, இவரது மனைவி லெற்றியா கிருபா, ரவி கெர்சோன் என்பவரின் மகள் ஜெரினியா எஸ்தர் ஆகிய 8 பேரும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வெள்ளாளன்விளை கிராமத்தில் நடந்த தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை மினி வேனில் சென்றுக் கொண்டு இருந்தனர்.
நேற்று மாலை 4.00 மணியளவில் சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே மினி வேன் வந்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த மினி வேன் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையின் வலதுபுறம் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் தலைக்குப்புற பாய்ந்தது. இதில் சுதாரித்துக்கொண்டு சைனி கிருபாகரன், ஜெரின் எஸ்தர் ஆகிய 2 பேர் காரின் கதவை திறந்து வெளியே குதித்து உயிர் தப்பினர்.
இதில், மோசஸ், அவரது மனைவி வசந்தா, அவரது மகன் ஹெர்சோம், ஜெயபால் மகன் ரவி கோயில் பிச்சை, அவரது மனைவி லெட்ரியா கிருபா, ஹெர்சோம் மகனான ஒன்றரை வயது ஸ்டாலின் ஆகியோர் காருடன் கிணற்றுக்குள் விழுந்தனர். இந்நிலையில், சைனி கிருபாகரன், ஜெரின் எஸ்தர் ஆகிய 2 பேரும் அந்த வழியில் சென்றவர்களிடம் இதைப் பற்றி கூறி கதறி அழுதனர். அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு கெர்சோன் என்பவரை லேசான காயத்துடன் பொது மக்கள் மீட்டனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளி வீரர்கள் இரு பொக்லைன் இயந்திரங்கள், ராட்சத கிரேன் ஆகியவற்றின் துணையுடன் பல நேரமாக மீட்பு பணி நடைபெற்றது. இந்த கோர விபத்தில் மோசஸ், வசந்தா, ரவி, எப்சியா கிருபா மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகிய ஐந்து பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் சாலை ஓரத்தில் தடுப்புகள் இல்லாதது இந்த விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் IAS பிறப்பித்துள்ள உத்தரவில், சாலைகளின் தரம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து அதனை சுற்றி சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.