மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜனவரி 14-ம் தேதி பேருந்து மூலம் யாத்திரை தொடங்குகிறார். இது தொடர்பாக ராகுல் காந்தி வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி மணிப்பூரில் இருந்து மும்பை வரை அதாவது 6,200 கிலோ மீட்டர் தூரம் யாத்திரை மேற்கொள்ளவுள்ளார் என காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஜனவரி 14-ம் தேதி தொடங்கும் பாரத் நியாய் யாத்திரையை 6200 கி.மீ. பயணித்து ராகுல் காந்தி மார்ச் 20-ல் நிறைவு செய்கிறார். “பாரத் நியாய் யாத்திரை” என்று பெயரிடப்பட்டுள்ள யாத்திரை மூலம் 14 மாநிலங்கள் வழியாக ராகுல் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற உள்ள “பாரத் நியாய் யாத்திரை” 66 நாட்கள் பேருந்து மூலம் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்கள் வழியாகவும், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் வழியாக பேருந்தில் ராகுல் காந்தி பயணம் செய்யவுள்ளார். பேருந்து மூலம் 85 மாவட்டங்கள் வழியாக பயணித்து ராகுல் காந்தி மக்களை சந்திக்கிறார்.