அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த ஆயுதப்படை காவலர் கைது..!

வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட கடலூர் ஆயுதப்படை காவலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த சம்பத் வழுதரெட்டியைச் சேர்ந்த கடலூர் ஆயுதப்படை முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் பாண்டியன் என்பவரிடம் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் பாண்டியன் தனக்கு அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நல்ல பழக்கம் உள்ளதால் யாருக்காவது அரசு வேலை கேட்டால் சொல்லுமாறு சம்பதிடம் தெரிவித்து இருந்தாராம். இதையடுத்து சம்பத் தனது மகன் ஞானவேல் BE முடித்துள்ளதாகவும் அவருக்கு அரசு வேலை கேட்டு பாண்டியனிடம் அணுகியுள்ளார்.

அப்போது, பாண்டியன் உங்கள் மகனுக்கு நான் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி மேலும் சில அரசு பணி நியமன உத்தரவுகளை காண்பித்தும், ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார். இதனை நம்பிய சம்பத் தெரிந்தவர், தெரியாதவர் என அங்கும் இங்கும் கடனை வாங்கி பாண்டியன் வங்கி கணக்கில் ரூ.4.50 லட்சம் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு பாண்டியன் வேலை வாங்கித் தராமல் இன்று, நாளை என இழுக்கடித்து உள்ளார்.

இதனால் மனம் நொந்துபோன சம்பத் வேலை இல்லாவிட்டாலும் பரவாயில்லை பணத்தையாவது திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் பணம் வரவில்லை ஆகையால் விழுப்புரம் குற்றப்பிரிவில் புகார் சம்பத் கொண்டார். இது குறித்து சம்பத் அளித்த புகாரின்பேரில் பாண்டியன் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

சீமான் கேள்வி: எந்தத் தமிழ் சாதியில் பாண்டியன் எனும் பெயர் இல்லை..!

ராமநாதபுரத்தில் சீமான் செய்தியாளர்கள் கேள்விக்கு, பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை வெளியேற்றி, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை, அப்படியே கொடுக்க வேண்டும். அதுவே தமிழ் தேசியத்தின் விடுதலை. நீங்கள் செய்யவில்லை எனில், ஒருநாள் அதிகாரத்திற்கு வரும் போது, அதை நாங்கள் செய்வோம். வேளாளர் என்பதே எங்களின் குடிப்பெயர். எந்தத் தமிழ் சாதியில் பாண்டியன் எனும் பெயர் இல்லை என்பதை சொல்லுங்கள் என சீமான் கேள்வியெழுப்பினார்.

மோசடி வழக்கில் விருதுநகர் பாஜக தலைவர் கைது…! சொந்த கட்சி நிர்வாகியிம் கைவரிசை …

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகர பாஜக துணைத்தலைவர் பாண்டியன். இவரின் மூத்த மகன் கார்த்திக்கிற்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், 2-வது மகன் முருகதாஸூக்கு ரயில்வேயிலும் வேலை வாங்கி தருவதாக, திருத்தங்கல்லை சேர்ந்த விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் கடந்த 2017ல் ரூ.11 லட்சம் வாங்கியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்த திருப்பி தராமலும் இழுத்தடித்தனர்.இதை தொடர்ந்து பாண்டியன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்தார். அதன்பின் தலா ரூ.2 லட்சத்திற்கு 5 காசோலை மற்றும் ரூ.1 லட்சத்திற்கு ஒரு காசோலை கொடுத்தனர். சில மாதங்கள் கழித்து ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொடுத்து ஒரு காசோலையை மட்டும் பாண்டியனிடம் இருந்து திரும்ப பெற்றனர். பாண்டியன் தன்னிடம் இருந்த 5 காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என திரும்பி வந்தன. இதனால் பாண்டியன், ரூ.9 லட்சத்தை திரும்ப கேட்டபோது இருவரும் பணம் தராமல் இழுத்தடித்தனர். இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து கலையரசனை கடந்த டிச.15ம் தேதி கைது செய்தனர். சுரேஷ்குமார் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ரூ.5.50 லட்சம் ரொக்க ஜாமீன் வழங்கியது. ஜாமீன் தொகையை செலுத்துவதற்கு மே 12 வரை காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் காலக்கெடு முடிந்தும் ஜாமீன் தொகையை செலுத்தவில்லை.இதையடுத்து விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார், பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர். சொந்த கட்சி நிர்வாகியிடம் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்ய இருப்பது விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.