ரூ.4.67 லட்சம் விவகாரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பறிப்பு..!

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசனை பொறுப்பில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் நிதிமுறைகேடு நடைபெற்றதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி மீது மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் மனு அளித்திருந்தனர்.

இந்த மனு மீது மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 2022 நவம்பர் மாதம் ஊராட்சி மன்றத்தின் 3-வது வார்டு உறுப்பினரும், துணைத் தலைவருமான ஜெயந்தி மாலா நீங்கலாக மற்ற 11 வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொடுத்தனர்.

இத்தனை தொடர்ந்து நிதியிழப்பு ஏற்படுத்திய புகாரில் நடத்தப்பட்ட கணக்கு தணிக்கையில், ரூ.4.67 லட்சம் உரிய அனுமதியின்றி செலவிட்டது தெரிய வந்துள்ளது. இந்த தொகையை நாகமணி, செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், தொகையை நாகமணி செலுத்தாததால் செக் அதிகாரமும் பறிக்கப்பட்ட நிலையில் பதவி பறிக்கப்பட்டது.