சாரா நர்சிங் கல்லூரியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…!

சாரா நர்சிங் கல்லூரியில் இஃப் தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரியில் இஃப் தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கல்லூரி தலைவர் பேராசிரியை கே.மரியம் உல் ஆசியா தலைமையில் கல்லூரி நிறுவனர் டாக்டர் ஜெய்லானி, கல்லூரி இயக்குனர் பி.கே.எம். முகமது சதுர்தீன், கல்லூரி செயலாளர் பெனாசிர் பேகம், கல்லூரி முதல்வர் பேராசிரியை எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியை. தமிழ்செல்வி, பேராசிரியை. சுசிலா உள்ளிட்ட பேராசிரியைகள், விரிவுரையாளர்கள்,கல்லூரி நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் எம்.சகாபுதீன் உள்ளிட்ட அனைத்து அலுவலர்கள், அனைத்து செவிலியர் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

புனிதமான ரமலான் நோன்பு சிறப்பு குறித்து காணொளி காட்சி, செவிலியர் பயிற்சியாளர்கள் ரமலான் விளக்க அரங்கேற்றம் நடைபெற்றது. செவிலியர் பயிற்சியாளர்களின் திருமறை திருக்குர்ஆன் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பேராசிரியை. எஸ். பாரதி நோன்பின் நோக்கம் குறித்து பேசினார். பிறகு பிரமாண்டமான அலங்கார மின் ஒளியில் அறுசுவையுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.