தமிழிசை சௌந்தரராஜன் நீட் தேர்வின் புனிதத்தன்மையை கெடுக்க இங்குள்ள அதிகாரிகள் முயற்சி..!

நீட் தேர்வின் போது மாணவர்களை .உதாசீனப்படுத்தி, துன்புறுத்துவது இங்குள்ள அதிகாரிகள் நீட் தேர்வின் புனிதத்தன்மையை கெடுக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MBBS, BDS) நீட் NEET (UG) நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது.

தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, மதுரை உட்பட மொத்தம் 31 நகரங்களில், நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள், தவறான வினாவிற்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும். என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வுகளுக்கு வழக்கம் போல இந்த ஆண்டும் கடும் உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாணவர்கள், வெளிர்நிற அரை கை சட்டைகளைத்தான் அணிய வேண்டும். முழு கை சட்டைகளை அணியக் கூடாது. ஷீக்களை அணியவும் கூடாது. கை கடிகாரங்கள், கூலிங் கிளாஸ் போன்றவை அணியவும் தடை தடைவிதிக்கப்பட்டது.

மாணவிகள் முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி ஆடைகளை மாணவிகள் அணியக் கூடாது; ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பர ஆபரணங்கள் அணியவும் கூடாது; காதணிகள், மூக்குத்திகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகளும் அணியக் கூடாது. ஹை ஹீல்ஸ் காலணிகள், ஷூக்கள் போடவும் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேர்வு மையத்துக்குள் கால்குலேட்டர், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது.

சாப்பிடக் கூடிய பொருட்களையும் கொண்டு செல்லக் கூடாது. நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாண்வர்கள் முற்பகல் 11.30 மணி முதல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் மிக கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே நீட் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, நீட் தேர்வு சோதனை என்பது காப்பி அடித்து அதன் மூலம் நன்றாக படிக்கும் மாணவர்களின் சீட்டுகள் தவறான செயல்களால் பறி போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் மாணவர்கள் இப்படி உதாசீனப்படுத்தப்பட கூடாது. துன்புறுத்தப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. இதில் யார் தவறு செய்கிறார்கள் என்றால் இங்கே உள்ள அதிகாரிகள், பரீட்சையை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தவறு செய்கிறார்கள்.

வேண்டுமென்றே ஒரு உயர்ந்த பரீட்சையை இப்படிப்பட்ட சில நடவடிக்கைகளின் மூலம் அதன் புனிதத்தன்மையை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சில பேர் இப்படி நடந்து கொள்கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டாகிவிட்டது. அதன்பேரில்தான் வருகிறார்கள். இது போல் மாணவர்களை துன்புறுத்தும் உதாசீனப்படுத்தும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். உடனே நீட் தேர்வே குறை என சொல்ல முடியாது. ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியது திமுகவின் தோல்வி என நான் சொல்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்து 5-ஆவது முறையாக தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.