ஆங்கிலப் புத்தாண்டு 2024 பிறப்பையொட்டி, உலகம் முழுவதும் இன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழக முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தி, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சுமார் 7 டன் வண்ண வண்ண பூக்களான மல்லிகை, முல்லை, சம்பங்கி, மரிக்கொழுந்து, ரோஜா, வெள்ளை, சிகப்பு, மஞ்சள் சாமந்தி, துளசி உள்ளிட்ட பல்வேறு நறுமண மலர்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அபிசேகத்துக்குப் பயன்படுத்திய மலர்கள் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.