‘டாக்டர் டெத்’ என்று அழைக்கப்படும் சீரியல் கில்லர் 67 வயதான தேவேந்தர் சர்மா ராஜஸ்தானின் தௌசாவில் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். தேவேந்தர் சர்மா ஒரு ஆயுர்வேத மருத்துவர். 1998 மற்றும் 2004 க்கு இடையில் பல மாநிலங்களில் செயல்படும் மருத்துவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் உதவியுடன் 125 க்கும் மேற்பட்ட சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மோசடிகளை அரங்கேற்றினார்.
2002 மற்றும் 2004 க்கு இடையில் பல டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர்களை தேவேந்தர் சர்மா கொடூரமாக கொலை செய்தார். ஓட்டுநர்களை பயணங்களுக்கு அழைத்து செல்லும் வழியில் அவர்களை கொலை செய்தார். உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்சில் முதலைகள் நிறைந்த ஹசாரா கால்வாயில் பலியானவர்களின் உடல்கள் வீசப்பட்டன.
தேவேந்தர் சர்மா மீது கொலை, கடத்தல், கொள்ளை உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன. தேவேந்தர் சர்மா பல கொலை வழக்குகளில் தண்டனை பெற்றவர். டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் ஏழு வெவ்வேறு வழக்குகளில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குருகிராம் நீதிமன்றம் தேவேந்தர் சர்மாவிற்கு மரண தண்டனையும் விதித்துள்ளது.
இந்நிலையில், திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தேவேந்தர் சர்மா ஆகஸ்ட் 2023 இல் பரோலில் விடுவிக்கப்பட்டார். அதன்பின் தலைமறைவான தேவேந்தர் சர்மா பாதிரியார் போல் மாறுவேடமிட்டு ஒரு ஆசிரமத்தில் ஒளிந்து வாழ்ந்து வந்தார். காவல்துறையினரின் தீவிர தேடுதலுக்கு பிறகு ‘டாக்டர் டெத்’ என்று அழைக்கப்படும் சீரியல் கில்லர் 67 வயதான தேவேந்தர் சர்மா ராஜஸ்தானின் தௌசாவில் டெல்லி காவல்துறையினர் கைது செய்யப்படுள்ளார்.