தேர்தல் பிரசாரத்தின் போது தேசிய கொடி பயன்படுத்திய பாஜக வேட்பாளர்…!!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் பாலகணபதி திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது தேசியக்கொடியை பயன்படுத்தி இருந்தார். அவருடன் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்த பெண்களின் கைகளில் பா.ஜ.க. கொடியுடன் சேர்த்து தேசிய கொடியும் இடம் பெற்றிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.