பெண்களை ஏமாற்றி 15 கோடிக்கும் மேல் சுருட்டிய நீம் பவுண்டேஷன்

தூத்துக்குடி மாவட்டம், இன்னாசியர்புரத்தில் உள்ள நீம் பவுண்டேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் லூயிஸ் ராஜ்குமார் அவரது மனைவி கவிதா ஆகியோர் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து நீம் பவுண்டேசன் சார்பில் பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணிக்காக தன்னார்வ ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் மில்லர்புரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி உட்பட பல பள்ளிகளில் நடைபெற்றது. மேலும் ஆசிரியர்களிடம் நீம் பவுண்டேசனில் உறுப்பினராக சேருவதற்கும், சிறப்பு பயிற்சி எடுப்பதற்கும் ரூ. 50,000 கட்டினால், மாதம் ரூ. 15,000 சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பி ஏராளமான ஆசிரியர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மரிய சில்வியா மைக்கேல் அண்டோ ஜீனியஸ் தம்பதி்யினரிடம் தங்கள் நிறுவனத்தின் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி செய்ய ரூ.50 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு முன்பணம் செலுத்தினால் மாதம் தோறும் ரூ.15 ஆயிரம் சம்பளம் தருவதாகவும், 15 ஆண்டுகள் வேலை செய்யலாம் என்றும், அரசு வேலை கிடைத்து சென்றாலோ அல்லது இடையில் வேலையை விட்டு நின்றுவிட்டாலோ முன்பணத்தை திருப்பித் தந்து விடுவதாக ஆசை வார்த்தைகள் கூறி உள்ளனர்.

இதனை நம்பிய மரிய சில்வியா ரூ.50 ஆயிரம் கொடுத்து உள்ளார். அதன்பிறகு அரசின் எவ்வித வழிகாட்டு முறைகளும் இல்லாமல், முறைகேடாக சிலுவைப்பட்டி, பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமித்து உள்ளனர். ஆனால் 4 மாதங்களாக எந்தவித சம்பளமும் வழங்கப்படவில்லை இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மரியசில்வியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து லூயிஸ் ராஜ்குமார், கவிதா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாமிரபரணியை பாதுகாக்க… வனத்துறையின் பொறுப்பில் இருந்து தாமிரபரணி ஆற்றை விடுவிக்க வேண்டும்..!

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் முன்னிலை வகிக்க, ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.த்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 418 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.

அதில், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் ஆலோசகர் வியனரசு, பொதுச் செயலாளர் அய்கோ மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்ட பகுதியில் தாமிரபரணியை பாதுகாக்கும் வகையில் வனத்துறையின் பொறுப்பில் இருந்து ஆற்றை விடுவிக்க வேண்டும. மாவட்ட பகுதியில் ஆற்றில் வளர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு, அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும்.

மருதூர் அணைக்கு கிழக்கே இருந்து திட்டமிடப்பட்டு உள்ள புறவழிக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், குடிநீர் வடிகால் வாரியம் பொதுப்பணித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.150 கோடிக்கு அதிகமான நிலுவைத் தொகையை வசூலித்து தாமிரபரணி பராமரிப்பு, பாசன திட்ட மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

கண்ணில் கருப்பு துணி… நெற்றியில் பட்டை நாமம்… முதியவர் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள தெற்கு அமுத்துன்னாங்குடியை சேர்ந்த அர்ச்சுனை பாண்டியன். இவர் தனது வீட்டு முன்பு பொதுப்பாதையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு, பட்டை நாமம் போட்டு கையில் கோரிக்கை அட்டையுடன் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சிறிது நேரம் போராட்டம் நடத்தினார். பின்னர் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுக்க சென்ற போது, அதிகாரிகள் யாரும் இல்லாததால், மனுவை பெட்டியில் போட்டார் இதனால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படாது.