ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் கேட்டு ஆட்டோ ஓட்டுநர் வங்கிக்கு போனால் யாரோ ஒருவர் வாங்கிய கடனுக்கு இந்தியன் வங்கி சிபில் ஸ்கோரில் கை வைக்க ஆட்டோ ஓட்டுநர் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு ஓட இந்தியன் வங்கியிடம் 3 லட்சம் கடனிலாமல் வாங்க போகிறார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்மசாலவர் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ஆட்டோ ஓட்டுநர் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காந்தி சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் 2001 முதல் சேமிப்பு கணக்கு வைத்து இருக்கிறார். இவர், வேறொரு வங்கியில் புதிய ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் லோன் கேட்டு 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி அன்று அணுகி இருக்கிறார். ஆனால் அப்போது அவரது சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிபில் ஸ்கோர் குறைந்ததற்கு என்ன காரணம் என்று வங்கியில் விசாரித்த போது, அவர் சேமிப்பு கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கி கிளையில் 2002-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதியில் மேலவாசல் இன்ப ராஜ் என்பவர் வாங்கிய ரூ.19 ஆயிரம் கடனுக்கு, நாராயணன் ஜாமீன்தாரராக கையெழுத்து போட்டதாகவும், அந்த கடனை இன்பராஜ் செலுத்தாததால் தற்போது அதன் நிலுவைத் தொகை ரூ.42 ஆயிரமாக உள்ளதாகவும், அதைக் கட்ட வேண்டிய பொறுப்பு நாராயணனுக்கு உண்டு என்று கூறினார்களாம். இதனால் தான் நாராயணனின் சிபில் ஸ்கோர் குறைந்துள்ளது என்றும் அந்த தொகையை செலுத்தினால் மட்டுமே அவரது சிபில் ஸ்கோர் உயரும் என்று இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதை கேட்ட நாராயணன், தான் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். மேலும் வங்கி அதிகாரிகள் மீது கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அன்று திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2002-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதியில் மேலவாசல் இன்பராஜ் என்பவர் வாங்கிய 19 ஆயிரம் ரூபாய் கடன் தொடர்பான இந்தியன் வங்கியின் கடிதங்களை ஆராய்ந்து பார்த்தது.
அதில் ஜமீன்தாரராக கையொப்பமிட்டது வேறு ஒரு என்.சீனிவாசன் என்பதும் அந்த சீனிவாசனின் விவரங்களுக்கு பதிலாக இந்த ஆட்டோ ஓட்டுநரான சீனிவாசன் மகன் நாராயணனின் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட விபரங்களை சிவில் நிறுவனத்துக்கு வங்கி பகிர்ந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால், நாராயணனுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கடனில் அவர் ஜாமீன் கையெழுத்து போட்டதாக சிபில் நிறுவனத்துக்கு தெரிவித்துவிட்டு, நீதிமன்றத்தில் அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்று பொய்யான தகவலைக் கூறியதாக இந்தியன் வங்கி நிர்வாகம் மீது புகார் எழுந்தது.
என் நாரயாணணுக்க பதில் சீ.நாராயணனின் சிபில் ஸ்கோரை இந்தியன் வங்கி குறைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் சி நாராயணனுக்கு 30 நாட்களுக்குள் நஷ்ட ஈடாக ரூ.3 லட்சம், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது சுற்று வட்டார பகுதிகளில் பேசுபொருளாக மாறியுள்ளது.