அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதற்கு ரூ.50 ஆயிரம் முன் பணம் கேட்ட பெண்கள் கைது..!

அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதற்கு ரூ.50 ஆயிரம் முன் பணம் கேட்ட பெண்கள் இருவரை ஆலங்காயம் காவல்துறை கைது சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு வேலையில் சேர வேண்டும் என்றால் போட்டித் தேர்வுகள் எழுத வேண்டும் அவர்களின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே அரசு வேலையில் சேர முடியும் என்கிற நிலை இன்றுள்ளது. மேலும் பல லட்சம் பேர் போட்டித் தேர்வுகள் எழுதனாலும் ஒருவருக்கு தான் வேலை கிடைக்கிறது. அதேநேரம் சிலர் குறுக்குவழியில் அரசு வேலையில் சேர விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் பணம் வாங்கிகொண்டு ஏமாற்றுவது நடக்கிறது.

மேலும், அங்கன்வாடி,போக்குவரத்து கழகம், நியாய விலை கடை போன்ற வேலைகளுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையிலான வேலையில் லஞ்சம் கேட்பதும் அடிக்கடி நடக்கிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்ற முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைதாகி உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை பலர் சமர்பித்துள்ளனர். இதற்காக விண்ணப்பித்தவர்களை திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அங்கன்வாடி அமைப்பாளர் ராமவதி மற்றும் ஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்த ஜம்ஷிகா ஆகியோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வேலை வாங்கித்தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆலங்காயம் பகுதியை சேர்ந்த அப்துல் ஷாஹித் என்பவரிடம் ராமவதி, மற்றும் ஜம்ஷிகா ஆகியோர் செல்போனில் பேசி அவரது மனைவிக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் முன் பணம் கேட்டார்களாம். இதைத்தொடர்ந்து பணம் தருவதாகக்கூறி குறிப்பிட்ட இடத்துக்கு அவர்களை வரவழைத்தனர். அங்கு ஆட்டோவில் வந்த அவர்கள் இருவரையும் பிடித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு இருவர் மீதும் வழக்குப்பதிவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்பத்தூரில் அதிகாலையில் திடீரென நுழைந்த ஐடி அதிகாரிகள்..!

தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முறைகேடு இன்றி அமைதியான முறையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தேர்தலில் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் காலையில் கார் மூலம் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அப்போது நவீன் என்பவரது வீட்டில் நடந்த சோதனையில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டுக்கட்டாக ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பாதயாத்திரையில்.. அண்ணாமலையிடம் அளித்த மனு.. கொஞ்ச நேரத்தில் பார்த்தால் ரோட்டில்..

தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைத்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில், தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை த ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல அண்ணாமலையின் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று பாஜக நம்பிக்கை கொண்டுள்ளார்.

அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணிக்கெல்லாம் பயணத்தை துவக்குவார்கள். திருச்செந்தூரை நோக்கி ஒரு காலத்தில் கலைஞர் நடந்த நடைப்பயணமும் சரி, வைகோ நடந்த நடைப்பயணமும் சரி, கடந்த ஆண்டு ராகுல் நடந்த நடைப்பயணம் சரி… காலை 6 மணிக்கெல்லாம் நடக்கத் துவங்கினர். இடையில் காலை உணவினை போகும் இடத்திலேயே முடித்துக் கொள்வர். பிறகு மீண்டும் நடைப்பயணம் தொடங்கும்.

ஆனால் அண்ணாமலை பெரும்பாலும் கேரவனிலேயே பயணம் செய்கிறார். தினமும் காலையில் 9:30-க்குத்தான் பயணத்துக்கே ரெடியாகி 2 கிலோமீட்டர் நடக்கிறார். பிறகு சட்டென்று கேரவனில் ஏறிக்கொள்கிறார். இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அவரின் நடைப்பயணத்தின் போது கொடுக்கப்பட்ட மனு சிறிது நேரத்தில் சாலை ஓரத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ரமா என்ற பெண், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்ட வழி இல்லாததால், அவற்றை ரத்து செய்ய ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்து உள்ளார். அண்ணாமலை அங்கிருந்து நகர்ந்த சில நிமிடங்களில் அந்த மனு சாலையில் கிடந்துள்ளதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.