2 நாட்கள் தார் டிரம்மில் சிக்கிய தவித்த தொழிலாளி..!

ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், விஜயவாடா அடுத்த ராயனபாடு பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 40 வயது கூலித்தொழிலாளி தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவ்வழியாக சாலை பணி காரணமாக போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு தொழிலாளி நிலை தடுமாறி அங்கிருந்த தார் டிரம்மில் தவறி விழுந்து, வெளியே வராமல் தவித்தார்.

ஆனால் இயந்திரங்கள் சத்தம் காரணமாக அவரது கூச்சல் யாருக்கும் கேட்கவில்லை.இதனால் கடந்த 2 நாட்களாக அவர் கூச்சலிட்டு, கூச்சலிட்டு சோர்வடைந்தார். இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் தார் டிரம்மில் தவறி விழுந்து தொழிலாளி கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக காவல்துறை தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறை கூலித்தொழிலாளியை போராடி மீட்டனர். இதையடுத்து சோர்வாக காணப்பட்ட தொழிலாளியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.