ஐந்து தலைமுறைகள் கண்ட முதியவருக்கு 101-வது வயது பிறந்தநாள் கொண்டாடிய கொள்ளு பேரன் பேத்திகள்..!

சிட்டுக்குருவிகள் சிறு கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றி, இரை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, தனது சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும் சந்தோஷமே தனி சுகமாகும். அதேபோல நம் மண்ணில் இன்பம், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு கூட்டுக் குடும்பங்கள் காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கிறது. அதிலும் குறிப்பாக கொள்ளு தாத்தாவின் பிறந்தநாளை அனைத்து உறவுகளும் சங்கமித்து கொண்டாடும் சுகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. அப்படி ஒரு பல தலைமுறைகள் கடந்த பிறந்தநாள் தாராபுரத்தில் கொண்டாட பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சேர்மன் தெருவில் வசித்து வரும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து முன்னாள் நகராட்சி உதவியாளராக பணியாற்றி வந்த கோவிந்தராஜ். அவர் தற்பொழுது ஓய்வு பெற்று தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில் தனது இளைய மகன் மற்றும் மூத்த மகனின் பேரன் மற்றும் பேத்திகளுடன் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். 101 வயது கோவிந்தராஜ் அவர்கள் தன்னுடைய பணிகளை இன்றும் தானே செய்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

தனது கொள்ளு பேரன் பேத்திகளுடன் கோவிந்தராஜ் ஒரு சிறு குழந்தையைப் போல அவர்களுடன் ஆடிப்பாடி விளையாடி தனது உறவினர்கள் உடன் பொழுதை கழிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது பேரன் பேத்திகள் என அனைவரும் இவர் மீது மிகுந்த பாசத்துடன் உள்ளனர். இன்றுடன் தாத்தா கோவிந்தராஜிக்கு 101 வயது நிறைவடைவதை முன்னிட்டு அவரின் மகன், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் என 56 பேர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் உறவினர்கள் இணைந்து தாத்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் தாத்தாவின் உறவினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வெகு விமரிசையாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் யானை சிங்க முகத்துடன் வந்து சூரபத்மனை வதம் செய்த முருகன்!

தாராபுரத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி தன்சுய ரூபத்துடன் வந்த சூரபத்மனை வதம் முருகன் செய்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி திருவிழாவின் சஷ்டி நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 7-ஆம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

இரவு 7.30 மணி அளவில் புதிய காவல் நிலைய வீதியில் உள்ள முருகன், கோவில் எதிரே முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து அலங்கியம் சாலை, புறவழிச் சாலை, தெந்தாரை, சர்ச்சாலை, அண்ணாசாலை, பெரிய கடை வீதி, டி.எஸ்.கார்னர், வழியாக அங்காளம்மன் கோவில் சென்றது.

சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தில் கஜமுக வடிவில் வந்த சூரபத்மனை முதலில் முருகன் வதம் செய்தார். பின்பு சிங்க முகத்தில் வந்த சூரபத்மனையும், தொடர்ந்து சுய ரூபத்தில் வந்த சூரபத்மனையும் முருகன் வதம் செய்தார். இறுதியில் சூரபத்மனை சேவலும், மயிலும் ஆக முருகன் ஆட்கொண்ட நிகழ்வு நடந்தது.

இந்த நிகழ்ச்சியை காண தாராபுரம் நகர் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமெழுப்பினர். இறுதியாக மீண்டும் சுப்பிரமணிய சாமி கோவிலில் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

கருணாநிதி கேள்வி: நியாய விலை கடையில் 20 ஆண்டுகளாக பணியாற்றிய தற்காலிக பணியாளருக்கு நியாயம் கிடைக்குமா ..?!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நகராட்சிக்கு உட்பட்ட கூட்டுறவுத்துறை மூலம் நியாய விலை நகர கடையின் எண் -3 செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நியாய விலை கடையில் குமாரசாமி தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திடீரென நியாய விலை மண்டல மேலாளர் சௌமியா தற்காலிக பணியாளர்களை வெளியேறும்படி கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3 நம்பர் நியாய விலை கடையில் கடந்த ஒரு வார காலமாக அரிசி பருப்பு, சர்க்கரை எண்ணெய் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் தினந்தோறும் இன்று போய் நாளை வா என பொதுமக்களை ஊழியர்கள் அலைக்கழித்து வருகின்றனர்.

மேலும், நியாய விலை கடையில் பணியாற்றி வந்த குமாரசாமியை எந்தவித அரசு ஆணையும் வழங்காமல் கடையில் இருந்து விலகிக் கொள்ளுமாறு தெரிவித்து வருகிறார். இதனால் மணமுடைந்த குமாரசாமி கடை முன் அமர்ந்து தர்ணா ஈடுபட்டார். இந்த செய்தி அறிந்த செய்தியாளர்கள் அங்கு குவிந்தனர்.

செய்தியாளர்களிடம் குமாரசாமி பேசுகையில், தாராபுரம் தாலுகாவிலுள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தொடர்ந்து 22 ஆண்டுகள் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறேன். என் மீது துறை ரீதியாகவும் பொதுமக்களும் எந்த புகார் அளிக்கவில்லை. என் மீது வன்மம் கொண்டு உடனடியாக வேலையை விட்டு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி வந்த நிலையில் நான் நீதிமன்றம் மூலம் நியாயம் கேட்டு சென்ற பொழுது அங்கேயும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து என் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்க இன்று முழு பொறுப்பு ரத்து செய்து எனக்கு எவ்வித முன் அறிவிப்பும் கொடுக்காமல் பத்துக்கு மேற்பட்ட கடை ஊழியர்களை வைத்து என்னை மிரட்டி வெளியேற்றி உள்ளனர்.

மேலும் தாராபுரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் ரிட்டையர்ட் ஆனவர்களை வைத்து செக்யூரிட்டி சர்வீஸ் என்ற பெயரில் மாதம் 10000 ரூபாய் சம்பளம் வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கு பென்ஷன் தொகையும் உண்டு. அதுபோல் என்னையும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டதற்கு நியாய விலை கடையை விட்டு வெளியே வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

எனக்கு வயது 47 ஆகிறது 20 ஆண்டுகளுக்கு மேலாக நியாய விலை கடையிலேயே வேலை செய்ததால், வேறு எந்த வேலையும் தெரியாது வேதனையுடன் தெரிவித்தார். ஆகையால் நியாய விலை கடையை விட்டு வெளியேறியதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நியாய விலை கடையில் 20 ஆண்டுகளாக பணியாற்றிய தற்காலிக பணியாளருக்கு நியாயம் கிடைக்குமா ..?! என தாராபுரம் முத்த பத்திரிகையாளர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு மேலாக நியாய விலை கடையில் பணியாற்றிய தற்காலிக பணியாளர் தர்ணா..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நகராட்சிக்கு உட்பட்ட கூட்டுறவுத்துறை மூலம் நியாய விலை நகர கடையின் எண் -3 செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நியாய விலை கடையில் குமாரசாமி தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திடீரென நியாய விலை மண்டல மேலாளர் சௌமியா தற்காலிக பணியாளர்களை வெளியேறும்படி கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3 நம்பர் நியாய விலை கடையில் கடந்த ஒரு வார காலமாக அரிசி பருப்பு, சர்க்கரை எண்ணெய் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் தினந்தோறும் இன்று போய் நாளை வா என பொதுமக்களை ஊழியர்கள் அலைக்கழித்து வருகின்றனர்.

மேலும் நியாய விலை கடையில் பணியாற்றி வந்த குமாரசாமியை எந்தவித அரசு ஆணையும் வழங்காமல் கடையில் இருந்து விலகிக் கொள்ளுமாறு தெரிவித்து வருகிறார். இதனால் மணமுடைந்த குமாரசாமி கடை முன் அமர்ந்து தர்ணா ஈடுபட்டார்.  இந்த செய்தி அறிந்த செய்தியாளர்கள் அங்கு குவிந்தனர்.

செய்தியாளர்களிடம் குமாரசாமி பேசுகையில், தாராபுரம் தாலுகாவிலுள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தொடர்ந்து 22 ஆண்டுகள் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறேன். என் மீது துறை ரீதியாகவும் பொதுமக்களும் எந்த புகார் அளிக்கவில்லை. என் மீது வன்மம் கொண்டு உடனடியாக வேலையை விட்டு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி வந்த நிலையில் நான் நீதிமன்றம் மூலம் நியாயம் கேட்டு சென்ற பொழுது அங்கேயும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து என் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்க இன்று முழு பொறுப்பு ரத்து செய்து எனக்கு எவ்வித முன் அறிவிப்பும் கொடுக்காமல் பத்துக்கு மேற்பட்ட கடை ஊழியர்களை வைத்து என்னை மிரட்டி வெளியேற்றி உள்ளனர்.

மேலும் தாராபுரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் ரிட்டையர்ட் ஆனவர்களை வைத்து செக்யூரிட்டி சர்வீஸ் என்ற பெயரில் மாதம் 10000 ரூபாய் சம்பளம் வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கு பென்ஷன் தொகையும் உண்டு. அதுபோல் என்னையும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டதற்கு நியாய விலை கடையை விட்டு வெளியே வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

எனக்கு வயது 47 ஆகிறது 20 ஆண்டுகளுக்கு மேலாக நியாய விலை கடையிலேயே வேலை செய்ததால், வேறு எந்த வேலையும் தெரியாது வேதனையுடன் தெரிவித்தார். ஆகையால் நியாய விலை கடையை விட்டு வெளியேறியதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கந்த சஷ்டி விழாவையொட்டி தாராபுரம் புகழ்பெற்ற முருகன் கோயிலில் கொடியேற்றம்..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் புகழ்பெற்ற முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். தாராபுரம் புதிய காவல் நிலையம் எதிரே பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பக்தர்கள் தொடர்ந்து 6 வாரங்கள் நெய்தீபம் ஏற்றி விரதம் இருந்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக, எப்போதும் செவ்வாய்க்கிழமைகளில் இந்த பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

முன்னதாக பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஆலயத்தை வலம் வந்து கொடிப்பட்டதை சிவாச்சாரியார்கள் கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கு தீப தூப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து ஆறுநாட்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. விழாவின் உச்சகட்டமாக வரும் 7-ஆம் தேதி சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக முருகப்பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசாய் முதியோர் இல்லத்தில் செய்தியாளர் கே. கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் TN சங்கத்தின் நிரந்தர தலைவரும் தாராபுரம் மாலை முரசு செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளரும் திருப்பூர் வசந்த்.டிவி மாவட்ட செய்தியாளரருமான திரு, கே.கருணாநிதி, அவர்களின் பிறந்தநாள் விழா அலங்கியம் சாலையில் உள்ள ஸ்ரீ” சாய் முதியோர் இல்லத்தில் நேற்று இரவு கொண்டாடப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக கல்வியாளர் டாக்டர் திரு. ஜெய்லானி அவர்கள் பங்கேற்று திரு.கே. கருணாநிதி அவர்களுக்கு சால்வை அணிவித்து. மேலும் தமிழ் இலக்கண வரலாற்றில் வீர மாமுனிவர் என்ற புத்தகம் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய The Throp of silence என்ற ஆங்கில புத்தகத்தையும் பரிசாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து சாய் முதியோர் இல்ல முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், இந்தியா ஃபாஸ்ட் தலைமை நிருபர் கவியரசன், நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் காஜா மைதீன், மாலைமலர் செய்தியாளர் கண்ணன், நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் கார்த்தி, சுதந்திர இந்தியா செய்தியாளர் ராஜா, காவலர் வாய்ஸ் செய்தியாளர் பிரபு, வின் தொலைக்காட்சி செய்தியாளர் சி எல் சாம்ராஜ் முரளி, தினக்காற்று செய்தியாளர் பிரதீப், அதிமுக மாவட்ட மாணவரணி துணைச் ஜகீர் அப்பாஸ் உள்ளிட்ட செய்தியாளர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

காவல்துறை பாதுகாப்போடு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடை பெறவில்லை. அன்றைய தினம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கிராம சபைக் கூட்டத்துக்கு வரவில்லை. அதனால் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் தலைவர் இல்லாமல் கிராம சபை நடத்தக் கூடாது என கூறி கிராம சபைக்கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.

அப்போது அதிகாரிகள் வேறொரு நாளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் காவல்துறை பாதுகாப்போடு கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நேற்று முன்தினம் அலங்கியம் சாலை திரு.வி.க நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது.

பெரியார் சிலை முன் காதல் ஜோடி சுயமரியாதை திருமணம்…!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா, வெல்லம்பட்டி கிராமம் கருப்பனம்பட்டி பகுதியில் வசிக்கும் ரமேஷ் மகன் ரஞ்சித் குமார் என்ற எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுக்கா தொண்டாமுத்தூரில் வசிக்கும் ஏழுமலை மகள் கெஜலட்சுமி என்ற பெண்ணும் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.மேலும், இந்த சுயமரியாதை திருமணத்தை, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கரூர் மாவட்ட தலைவர் கு.கி.தனபால் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் நலக் கட்சி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தென்னரசு, மாவட்ட விவசாய அணி செயலாளர் வேலுசாமி, திமுகவைச் சேர்ந்த வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் நகரப் பொருளாளர் ரகுமான், மோகன்ராஜ் வழக்கறிஞர் உதயநிதி ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, சுயமரியாதை திருமணம் குறித்து சாமானிய மக்கள் நல கட்சியின் மாநில பொதுச்செயலாளர், வழக்கறிஞர் குணசேகரன் கூறுகையில், தந்தை பெரியாரின் கொள்கை வழியில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை தாண்டி எம்பிஏ பட்டதாரி வாலிபர், பெரியாரின் வழியை ஏற்று, சுயமரியாதை திருமணம் செய்ததை பாராட்டி வாழ்த்துகிறோம் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கரூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் கோரிக்கை மனுவினை அளித்தனர். கோரிக்கையை பெற்றுக் கொள்ள மறுத்து, கரூர் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர், பேபி காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்றார். மேலும் அங்கிருந்த காவலர்களும் காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர்.

இந்நிலையில், கரூர் நகர காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி, பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனர். இன்று கரூர் நகர காவல் துறையினர், இருதரப்பு பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.சாதி மறுப்பு சுயமரியாத திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றவரிகளிடம் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் கோரிக்கை மனுவினை பெற்றுக்கொள்ளமால் காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத கவுண்டச்சிபுதூர்…! கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் வராததால் மீண்டும் பரபரப்பு…!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் 77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றம் சார்பில் கிராம சபை கூட்டம் எம்.பி.சாமி காலனி பூங்காவில் நேற்று காலை 11 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் வரதா காரணத்தால் ஊராட்சி செயலர் பெரியசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாச்சிமுத்து ஆதரவுடன் கிராம சபை கூட்டத்தை நடத்த முன் வந்தனர். ஆனால் ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சித்தலைவர் இல்லாமல் கூட்டத்தை நடத்துவதா என பொதுமக்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பினர்.

அப்போது ஊராட்சி செயலாளர் பெரியசாமி தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதாக தெரிகிறது. பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை கேட்பதாக கூறி கடந்த மே 1-ந்தேதி நடைபெற்ற கூட்டத்திலும் ஊராட்சி தலைவர் பங்கேற்க வில்லை, அதேபோன்று நேற்றும் புறக்கணித்ததாக கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் எழுந்து நின்று அதிகாரிகளிடம் ஊராட்சி பகுதியில் கடந்த 4 வருடங்களாக சாக்கடை, குடிநீர், தெரு விளக்கு, துப்புரவுப்பணி, தார் சாலை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதாகவும், பிரச்சினைகளை மனு மூலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றால் முறையான பதில் எதுவும் தராமல் சத்தம் போட்டு திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே தலைவர் செல்வி கிராம சபை கூட்டத்திற்கு வர வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஒத்தி வைப்பு அதைத் தொடர்ந்து கிராம சபை கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.