கடனை திரும்பக் கேட்ட வங்கி மேலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அமைச்சர் கீதாஜீவன் ஆதரவாளர்..!

கொடுத்த கடனை திரும்பக் கேட்ட வங்கி மேலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அமைச்சர் கீதாஜீவனின் தீவிர ஆதரவாளரும், திமுக பகுதிச் செயலாளருமான ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்பேட்டை திமுக பகுதிச் செயலாளராக இருப்பவர் ஜெயக்குமார் அமைச்சர் கீதாஜீவனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

ஜெயக்குமார், தூத்துக்குடி துறைமுகம் சாலையில் உள்ள ஒரு தனியார் கடன் பெற்றுள்ளதாகவும் அதனை முறையாக செலுத்தாததால் வங்கி மேலாள‌ர் கடனைத் திருப்பி செலுத்தக் கோரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், காமராஜ் உள்பட பலர் வங்கி மேலாளரை தாக்கியதோடு கொலைமிரட்டல் விடுத்தாகத் தெரிகிறது.

இதனை தொடர்ந்து பலத்த காயமடைந்த வங்கி மேலாளர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த தகவல் தூத்துக்குடிமத்தியப் பாகம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு BNS act: 296, 115, 118, 351ன் கீழ் வழக்குப் பதிவு (FIR: 167/2025) செய்து திமுக பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் உள்பட நான்கு பேர் மீது வழக்குச் செய்தனர்.

முன்னாள் ராணுவ வீரர்கள்: செல்லூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!

செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். ஜம்மு -காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் தாக்குதல் போர் நடவடிக்கை தான் என்றும் அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என பாகிஸ்தான் கொக்கரித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் நேற்று அதிகாலையில் சீனா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு பாகிஸ்தான் இந்தியா எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷ்யா வழங்கிய பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதற்கிடையே பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதலை நடத்த தொடங்கியது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மேலும் மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்தார். அப்போது, “2 நாட்கள் தூங்காமல் கண்விழித்து ராணுவ நடவடிக்கைகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும். அதற்கு பதிலாக ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக கூறுகிறது. .

ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்” செல்லூர் ராஜு தெரிவித்தார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், செல்லூர் ராஜூ பேச்சை கண்டித்து கரூரில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தினர். எல்லை வீரர்களை விமர்சித்த செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மீண்டும் அவர் தேர்தலில் நின்றால் அவருக்கு அவருக்கு எதிராக அவரது தொகுதியில் பிரசாரம் செய்வோம் என முன்னாள் ராணுவத்தினர் பேசினார்.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் நடத்தி 29 அப்பாவிகளை கொன்ற 4 பேர் இவர்கள் தான்..!

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் 4 பேரின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பயங்கரவாதிகளின் ஸ்கெட்ச் வரைபடம் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக ஒரேயொரு பயங்கரவாதி சம்பவ இடத்தில் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது எடுத்த போட்டோ வெளியிடப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் 4 பேரின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று தஞ்சாவூர் இன்று மதுரை..! காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இளைஞர்..!

நேற்று தஞ்சாவூரில் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஜெராக்ஸ் கடையில் பணியாற்றும் இளம்பெண் மீது இளைஞர் ஒருவர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் மீண்டும் தமிழகத்தை அதிர வைத்துள்ளது.

கடந்த நவம்பர் 17 -ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை பகுதியிலுள்ள ஜெராக்ஸ் கடையில் பணிபுரியும் இளம்பெண்ணை இளைஞர் சித்திக் ராஜா என்பவர் காதலிக்க வற்புறுத்தி அந்தப் பெண் மீது இளைஞர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த காயமடைந்த பெண் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். பணிபுரியும் இளம்பெண் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் குறித்து ஒத்தக்கடை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், ஒரு இளைஞர், ஜெராக்ஸ் கடைக்கு வந்து, அந்த இளம்பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்க ஒருகட்டத்தில் கோபமடைந்த இளைஞர், அந்த இளம்பெண்ணை சரமாரியாக தாக்குகிறார். இந்தக் காட்சி அப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. நேற்று தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளியின் உள்ளேயே கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி வீடியோ வெளியாகி மீண்டும் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி மீதான தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அவர் மீது மர்ம நபர் ஒருவர் தூரத்திலிருந்து கல்லை வீசி தாக்கினார். அந்த கல் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிறிய ரத்தக் காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்த அதிகாரிகள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு உடனடியாக முதலுதவி செய்தனர். ஜெகன் மோகன் ரெட்டி நெற்றியில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில், “ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு சம்பவத்துக்கு கண்டனங்கள். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபடும்போது நாகரீகத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.